திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1748 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு கருமத்தை அனுஷ்டியா நின்றோம் அது நமக்கு ரஷகம் அன்று ஸ்ரீ சர்வேஸ்வரனே ரஷகன் -என்று இருக்கும் இருப்பில் குலைத்தலை உடைய நெஞ்சை உடையார் அன்றிக்கே இருப்பாருமானவர்கள் வர்த்திக்கிற – ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானே) 1 | வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவிச்
சங்கமாரங்கைத் தடமலருந்திச் சாம மா மேனி என் தலைவன்
அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலை பயின்று எரி மூன்றும்
செங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர் திருக் கண்ணங்குடியுள் நின்றானே –9-1-1 | பதவுரை Show / Hideவங்கம், Vangam - மரக்கலங்களை யுடைத்தாய் மா, Maa - பெரிதான முந்நீர், Munnir - (திருப்பாற்) கடலிலே, வரி, Vari - பல கோடுகளையும் நிறம், Niram - அழகையுமுடைய பெரிய, Periya - விசாலமான வாள், Vaal - ஒளி பொருந்திய அரவு, Aravu - திருவனந்தாழ்வானாகிற இன், In - இனிமையான அணை, Anai - படுக்கையிலே மேவி, Mevi - பொருந்தி வர்த்திப்பவனும், என் தலைவன், En Thalaivan - எம்பெருமான் (எங்கு எழுந்தருளியிருக்கிறனென்றால்) அங்கம் ஆறு, Angam Aaru - ஆறு வேதாங்கங்களென்ன ஐந்து வேள்வி, Ainthu Velvi - பஞ்சமஹாயஜ்ஞங்களென்ன நால் வேதம், Naal Vedham - நான்கு வேதங்களென்ன அரு கலை, Aru Kalai - (வேதங்களுக்கு உபப்ரும் ஹணமாகவுள்ள) அருமையான நூல்களென்ன ஆகிய இவற்றை பயின்று, Payinru - காலக்ஷேபமாகக் கொண்டு எரி மூன்றும், Eri Moondrum - த்ரேதாக்நிகளை செம் கையால் வளர்க்கும், Sem Kaiyal Valarkkum - செவ்விய கைகளாலே ஓம்புகின்றவர்களும் துளக்கம் இல் மனத்தோர், Thulakkam Il Manaththor - நிலைநின்ற அத்யவஸாய முடையவர்களுமான அஅந்தணர்வாழ்கிற திருக்கண்ணங்குடியுள், Thirukkannangudiyul - திருக்கண்ணங்குடி யென்னுந் திருப்பதியிலே நின்றான், Nindraan - எழுந்தருளியிருக்கிறான். |