திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1749 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆகாச அவகாசத்தை வெளி அடைத்துக் கொண்டு வந்து தோற்ற – சாபத்தாலே திண்ணியதான நெஞ்சை உடைய முதலை-சின்னம் பின்னம் -என்கிறபடியே துணி படும்படி பிரதி பஷததின் மேலே நெருப்பை உமிழா நின்றுள்ள திரு ஆழியை ஏவினவன்) 2 | கவளமாக தத்த கரி உய்யப் பொய்கை காரம் கொளக் கலங்கி யுள் நினைந்து
துவள மேல் வந்து தோன்றி வன் முதலை துணி படச் சுடு படை துரந்தோன்
குவளை நீள் முளரிக் குமுத மொண் கழுநீர் கொய் மலர் நெய்தல் ஒண் கழனித்
திவளும் மாளிகை சூழ் செழு மணிப் புரிசைத் திரு கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-2 | பதவுரை Show / Hideகவளம், Kavalam - கவளங்கொள்ளுமியல் புடையதும் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.)) மா கதத்த, Maa Kathath - மிக்க மதத்தையுடையதுமான கரி, Kari - கஜேந்திரன் பொய்கை, Poykai - ஒரு பொய்கையிலிருந்த கராம், Karaam - முதலையினாலே கொள, Kol - கௌவப்பட்டு கலங்கி, Kalangi - கலக்கமடைந்து உள் நினைந்து, Ul Ninaindhu - (எம்பெருமானைச்) சிந்தித்து துவள, Thuvazhal - வருந்திநின்றவளவிலே, உய்ய, Uyya - அது உஜ்ஜீவக்கும்படி மேல் வந்து தோன்றி, Mel Vandu Thondri - மேல்வழியாய் எழுந்தருளி ஸேவைஸாதித்து வன் முதலை, Van Muthalai - வலிவுள்ள (அந்த) முதலை துணிபட, Thunipad - துண்டாக அறும்படி சுடு படை, Sudu Padai - ஜ்வலிக்கின்ற திருவாழிப்படையை துரந்தோன், Thuranthoon - பிரயோகித்தருளின எம்பெருமான்,- குவளை, Kuvazhai - கருநெய்தற்பூக்களென்ன நீள் முளரி, Neel Mulari - பெரிய தாமரைப் பூக்களென்ன குமுதம், Kumudham - ஆம்பலென்ன ஒண் கழுநீர், On Kazhuneer - செங்கழுநீரென்ன கொய் மலர் நெய்தல், Koi Malar Neithal - பறிக்கைக்கு உரியமலரை யுடைத்தான நெய்தலென்ன ஆகிய இவற்றாலே ஒண், On - அழகுபெற்ற கழனி, Kazhani - கழனிகளையுடையதும் திவளும் மாளிகை சூழ், Thivalum Maligai Soozh - பிரகாசிக்கின்ற திருமாளிகைகளாலே சூழப்பட்டதும் செழு மணி புரிசை, Sezhu Mani Purisai - சிறந்த ரத்நமயமான திருமதிளையுடையதுமான |