திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1752 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பூமிப் பரப்பை அடைய இரண்டடியாலே அளப்பதாக பரந்த திக்குகள் அடங்கலும் திருவடிகளுக்கு உள்ளே அடங்கும் படி வளர்ந்தவன்) 5 | மன்னவன் பெரிய வேள்வியில் குறளாய் மூவடி நீரொடும் கொண்டு
பின்னும் ஏழு உலகம் ஈரடியாகப் பெரும் திசை யடங்கிட நிமிர்ந்தோன்
அன்ன மென் கமலத் தணி மலர்ப்பீடத் தலை புனலிலைக் குடை நீழல்
செந்நெல் ஒண் கவரி யசைய வீற்று இருக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-5 | பதவுரை Show / Hideமன்னவன், Mannavan - (மஹாபலியென்னும்) அரசனுடைய (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்.)) பெரிய வேள்வியில், Periya Velviyil - மஹாயஜ்ஞத்திலே குறள் ஆய், Kural Aayi - வாமநமூர்த்தியாய் (ச்சென்று) நீரொடு, Neerodu - (அவன்வார்த்த) தாரையோடு மூ அடியும், Moo Adiyum - மூவடி நிலத்தையும் கொண்டு, Kondru - கைப்பற்றி பின்னும், Pinnum - பிறகு ஏழ் உலகும், Ezhu Ulagum - ஏழுலகங்களையும் ஈர் அடி ஆக, Eer Adi Aaga - இரண்டடியாலே அளப்பதாக பெரு திசை அடங்கிட, Peru Thisai Adangida - பரந்த திக்குக்கள் இட மடையும்படி நிமிர்ந்தோன், Nimirndhon - ஓங்கிவளர்ந்த பெருமான்,- அன்னம், Annam - அன்னப்பறவை மென் கமலத்து மலர், Men Kamalaththu Malar - மெல்லிய தாமரைப்பூவாகிய அணி பீடத்து, Ani Peedaththu - அழகிய ஆஸனத்திலே அலை புனல், Alai Punal - அலையெறிகிற ஜலத்திலுண்டான இலை, Ilai - இலையாகிற குடை, Kudai - குடையினுடைய நீழல், Neezhal - நிழலிலே செந்நெல் ஒண் கவரி அசைய, Sennel On Kavari Asaiya - அழகிய செந்நெற்கவரிவீச வீற்றிருக்கும், Veetirukkum - வீற்றிருக்கப்பெற்ற |