திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1753 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மழுவைக் கொண்டு பூமியில் ராஜாக்களை இருபத்தொரு படி கால் அறுத்து அவர்கள் உடைய ருதிர வெள்ளத்திலே குளித்து உதக் கிரியையும் பண்ணி மிக்க கோபம் தவிர்ந்தவன்) 6 | மழுவினால் அவனி யரசை மூவெழு கால் மணி முடி பொடிபடுத்துதிர
குழுவு வார் புனலுள் குளித்து வெங்கோபம் தவிர்ந்தவன் குலை மலி கதலி
குழுவும் வார் கமுகும் குரவு நற்பலமும் குளிர் தரு சூத மாதவியும்
செழுமையார் பொழில்கள் தழுவு நன் மாடத் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-6 | பதவுரை Show / Hideமூ எழு கால், Moo Ezhuthu Kaal - இருபத்தொரு தலைமுறையளவும் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-)) அவனி அரசை, Avani Arasai - பூமியிலுள்ள ராஜாக்களுடைய மணி முடி, Mani Mudi - மணியணிந்த கிரீடங்களை மழுவினால், Mazhuvinal - கோடாலிப்படையினால் பொடி பொடியாகச்செய்து பொடிபடுத்து, Podipaduthu - (அரசர்களை யெல்லாம் கொன்று.) உதிரம் குழுவு, Uthiram Kuzhuvu - (அவர்களுடைய) ரத்த ஸமூஹமாகிற வார் புனலுள், Vaar Punalul - வெள்ளத்திலே குளித்து, Kulithu - ஸ்நாநம்பண்ணி வெம் கோபம் தவிர்ந்தவன், Vem Kobam Thavirthavan - மிக்க கோபம் தணியப் பெற்ற பெருமான்,- குலை மலி, Kulai Mali - குலைகளாலே நிறைந்த கதலி, Kathali - வாழைகளினுடைய குழுவும், Kuzhuvum - தோப்பும் வார் கமுகும், Vaar Kamukum - ஓங்கின பாக்குமரங்களும் குரவும், Kuravum - குரவமரங்களும் நல் பலவும், Nal Palavum - நல்ல பலாமரங்களும் குளிர்தரு சூதம், Kulirtharu Sootham - குளிர்ந்த மாமரங்களும் மாதவியும், Madhaviyum - குருக்கத்தியுமாகிய செழுமை ஆர் பொழில்கள் தழுவு, Sezhumai Aar Pozhilgal Thazhuvu - செழிப்புடைய சோலைகளாலே சூழப்பட்டதும் நல் மாடம், Nal Maadam - நல்ல மாடமாளிகைகளையுடையதுமான சூதம், மாதவி, Sootham Madhavi - வடசொற்கள் |