திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1754 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இலங்கைக்கு நிர்வாஹகனாய் இருக்கிற ராவணனை –ஆதித்ய கிரணம் போலே கூரிய அம்புகளாலே வர பலத்தாலே பூண் கட்டின முடிகள் ஆனவை பனம் பழம் போலே உதிரும்படி வில்லை வளைத்தவன் – மதுபான மத்தமான வண்டுகள் இனிய இசை பாடா நின்றுள்ள ராவணன் உடன் பொருத ஸ்ரமம் ஆறும் படி ஆடல் பாடல் கேட்டுப் போது போக்கி இருக்கலான தேசம் ஆயிற்று) 7 | வானுளாரவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கை யார் கோனைப்
பானுநேர் சரத்தால் பனங்கனி போலப் பரு முடியுதிர வில் வளைத்தோன்
கானுலா மயிலின் கணங்கள் நின்றாடக் கண முகில் முரச நின்றதிரத்
தேனுலா வரி வண்டின் இன்னிசை முரலும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-7 | பதவுரை Show / Hideவலிமையால், Valimaiyaal - (தனது) மிடுக்கினால் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான்-.)) வானுளாரவரை நலியும், Vaanulaaravarai Naliyum - தேவர்களை ஹிம்ஸதித்துக் கொண்டிருந்த மறிகடல் இலங்கை யார் கோனை, Marikadal Ilangai Yaar Konai - அலைமறியுங் கடல்சூழ்ந்த இலங்கையில் உள்ளவர்களுக்கு அரசனான இராவணனுடைய பரு முடி, Paru Mudi - பருத்த தலைகள் பானு நேர் சரத்தால், Paanu Ner Sarathaal - ஸூர்யனோடொத்த (திக்ஷ்ணமான) அம்புகளாலே பனங்கனி போல, Panangani Poola - பனம்பழம்போல உதிர, Uthira - அற்றுவிழும்படி வில் விளைத்தோன், Vil Vilaitthon - சார்ங்கத்தை வளைத்த பெருமான் கான் உலாம், Kaan Ulaam - காட்டிலே உலாவுகின்ற மயிலின் கணங்கள், Mayilin Kanangal - மயில் கூட்டங்கள் நின்று ஆட, Ninru Aada - நின்று கூத்தாடவும், கணம் முகில், Kanam Mukil - திரண்ட மேகங்கள் முரசம் நின்று அதிர, Murasam Ninru Athira - முரஜவாத்தியம் போல நின்று முழங்கவும், தேன் உலாம் வரி வண்டு, Then Ulaam Vari Vandu - தேன்களிலே திரிகின்ற அழகிய வண்டுகள் இன் இசை முரலும், In Isai Muralam - இனிய ராகங்களை ஆலாபிக்கவும் பெற்ற |