திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1755 | பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்ப்பத் த்வஜன்-என்னக் கடவது இ றே துரியோதனனை –அவன் தன ஓலகத்தினுள்ளே ஆசனத்தை ஜகத்துக்கு வேர் பற்றானவனை அளிக்கப் புகா நின்றோம் என்று கூசாதே இட்டு அதுவே ஹேதுவாக பெரிய வடிவானது அண்ட அவகாசத்தை ஊடுருவ திக்குகள் தன பக்கலிலே அடங்கும்படியாக வளர்ந்தவன்) 8 | அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சாதே இட வதற்குப்
பெரிய மா மேனி அண்டமூடுருவப் பெருந்திசை அடங்கிட நிமிர்ந்தோன்
வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிருதிர் முத்தும்
திரை கொணர்ந்துந்தி வயல்தொரும் குவிக்கும் திருக் கண்ணங்குடி யுள் நின்றானே –9-1-8 | பதவுரை Show / Hideஅரவு நீள் கொடியோன், Aravu Neel Kodiyon - ஸர்ப்பத்வஜனான துரியோதனன் (- (திருக்கண்ணங்குடியுள், நின்றான் -.)) அவையுள், Avaiyul - ஸபையிலே ஆசனத்தை, Aasanaththai - (பொய்யான) ஆஸனத்தை அஞ்சிடாதே இட, Anjidaadhe Ida - அஞ்சாமல் இட அதற்கு, Adharku - அதுகாரணம்பற்றி பெரிய மா மேனி, Periya Maa Meeni - பெரிய திருமேனியை யுடையனாய்க் கொண்டு அண்டம் ஊடு உருவ, Andam Oodu Uruva - மேலுலகம் ஊடுருவிச் செல்லும்படியாகவும் பெரு திசை அடங்கிட, Peru Thisai Adangida - பெரிய திக்குகள் (தன்னிலே) அடங்கும் படியாகவும் நிமிர்ந்தோன், Nimirndhon - வளர்ந்த பெருமான் வரையின் மா மணியும், Varaiyin Maa Maniyum - ஸஹ்ய பர்வதத்திலிருக்கிற சிறந்த ரத்னங்களையும் மரதகம் திரளும், Maradhagam Thiralum - மரதகக் குலியல்களையும் வயிரமும், Vayirum - வயிரங்களையும் வெதிர் உதிர் முத்தும், Vethir Uthir Muththum - மூங்கில்களினின்று உதிர்ந்த முத்துகளையும் திரை, Thirai - அலைகளானவை உந்தி கொணர்ந்து, Undhi Konarnthu - தள்ளிக்கொண்டுவந்து வயல் தொறும், Vayal Thorum - கழனிகளெங்கும் குவிக்கும், Kuvikkum - குவிக்குமிடமன |