திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1766 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1766பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (திரு முகத்திலே விழித்த வாறே-ஆபத் சகர் என்று தோற்றும்படி இரா நின்றார்) 9
எண்டிசையும் எறி நீர்க் கடலும் ஏழுலகும் உடனே விழுங்கி மண்டியோர் ஆலிலைப் பள்ளி கொள்ளும் ஆயர் கொல் மாயம் அறிய மாட்டேன் கொண்டல் நன்மால் வரையேயும் ஒப்பர் கொங்கலர் தாமரைக் கண்ணும் வாயும் அண்டத்தமரர் பணிய நின்றார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-9
பதவுரை Show / Hide
எண் திசையும் எறி நீர், En Thisaiyum Erhi Neer - எட்டுத்திசைகளிலும் வந்து அலையெறிகின்ற நீரையுடைய (- (ஒப்பர்ஒத்திருக்கின்றார்;) (ஒருவர், அழகிய ஆ அச்சோ!-.-))
கடலும், Kadalum - கடல்களையும்
ஏழ் உலகும், Ezhu Ulagum - ஸப்தலோகங்களையும்
உடனே விழுங்கி, Udane Vizhunki - (பிரளயத்தில்) ஒருசேர விழுங்கி
ஓர் ஆல் இலை, Oor Aal Ilai - ஒரு ஆலிலையிலே
மண்டி, Mandi - பொருந்தி
பள்ளி கொள்ளும், Palli Kollum - துயில் கொண்டருளின
மாயர் கொல், Maayar Kol - ஆச்சரியபூதரோ இவர்! ;
மாயம், Maayam - (இவருடைய) ஆச்சரியநிலைமையை
அறியமாட்டேன், Ariyamaatten - அறிகின்றிலேன்;
கொண்டல், Kondal - நீர்கொண்ட மேகத்தையும்
நல் மால் வரையேயும், Nal Maal Varaiyeum - அழகிய பெரிய மலையையும்
கண்ணும் வாயும், Kannum Vaayum - (இவருடைய) திருக்கண்களும் திருமுகமும்
கொங்கு அலர் தாமரை, Kongu Alar Thaamarai - பரிமளம் மிக்க தாமரையாயே யிருக்கின்றன;
அண்டத்து அமரர், Andaththu Amarar - பரமபதத்திலுள்ள நித்யஸூரிகள்
பணிய நின்றார், Paniya Nindraar - வந்து தொழும்படி நிற்கின்ற