திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1768 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1768பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் போல்வாருக்கு அன்றோ அவன் தானே வரும் அளவும் ஆறி இருக்கிறோம் என்று தரிக்கல் ஆவது பழையார் பாடாற்ற வல்லது புதியார் க்கும் ஆற்றப் போமோ ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -என்னக் கடவது இறே அசாதாரணரான ஸ்ரீ நித்ய சூரிகளிலே ஸ்ரீ திருவடி ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் போல்வார் தான் பட்டார்களோ நான் பட்டபடி -என்கிறார் என்று ஆயிற்று – இதுக்கு ஸ்ரீ ஜீயர் அருளிச் செய்யும் படி –-இது தன்னை ஸ்ரீ ஆழ்வார் பாடா நிற்க ஸ்ரீ எம்பெருமானார் -அங்கு ஆர் உயிர் பட்டது இங்கே எனது உயிர் பட்டது -என்று அருளிச் செய்தார் – ஸ்ரீ ஆழ்வார் உடைய அனுபவத்தை யாகில் ப்ராப்யமாக சொல்லுகிறதும்-ஆசைப் படுகிறதும் அதுக்கு அவ்வருகே ஒரு ஏற்றம் சொல்லுவாரைப் போலே சொல்லுவான் என் என்று நான் ஸ்ரீ ஜீயரைக் கேட்க நாவோடையான ஸ்திரீக்கு பர்த்தாவின் உடைய கர ஸ்பர்சம் உண்டானால்-வேர்ப்பது விடுவது ஆமாபோலே அனுபவத்தில் புதுமையால் படுகிற அலமாப்பு காணும் என்று அருளிச் செய்தாராக ஸ்ரீ பிள்ளை அருளிச் செய்வர்) 1
தன்னை நைவிக்கிலேன் வல்வினையேன் தொழுதும் எழு பொன்னை நைவிக்கும் அப் பூஞ்செருந்தி மண நீழல் வாய் என்னை நைவித்து எழில் கொண்டு அகன்ற பெருமான் இடம் புன்னை முத்தம் பொழில் சூழ்ந்து அழகாய புல்லாணியே –9-3-1
பதவுரை Show / Hide
வல் வினையேன், Val Vinaiyen - கொடிய பாவத்தை யுடையேனான நான்
தன்னை, Thannai - என்னை
நைவிக்கில் என், Naivikkil En - சிதிலப்படுத்திக் கொள்வதனால் என்ன பயன்?
பொன்னை நைவிக்கும், Ponnai Naivikkum - (பொன்னுருவத்தைத் தோற்கடிக்கவல்ல
அப்பூ செருந்தி மணம் நீழல்வாய், Appoo Serunthi Manam Neelalvai - அப்படிப்பட்ட ஸுரபுன்னைப் பூக்களின் பரிமளமுள்ள நிழலிலே
என்னை நைவித்து, Ennai Naiviththu - என்னை யீடுபடுத்தி
எழில் கொண்டு, Ezhil Konda - (எனது) மேனிநிறத்தைக் கவர்ந்துகொண்டு
அகன்ற, Akanra - பிரிந்துபோன
பெருமான், Perumaan - எம்பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாயும்,
முத்தம், Muththam - முத்தரும்பின
புன்னை பொழில் சூழ்ந்து, Punnai Pozhil Soozhndhu - புன்னைமரச் சோலைகளாலே சூழப்பட்டு
அழகாய, Azhagaya - அழகியதாயுமிருக்கிற
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
தொழுதும், Thozhudum - வணங்குவோம்,
எழு, Ezhu - புறப்படு.