திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1769 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1769பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அதனில் பெரிய என் அவா -என்னுமா போலே விபுத்வத்துக்கு அவ்வருகாம் படியாய் இருக்கை- அணு வஸ்து இறே விபு வஸ்துவை விளாக்குலை கொள்ளுகிறது – அப்படியே இருக்கும் இறே சங்கோசம் அற அவன் பண்ணிக் கொடுத்த வாறே – பிரிகிற தமக்கும் அது உண்டாகில் பிரியான் இறே-இன்னம் காதல் தானே பெருகி தலை மறிந்தது இல்லை) 2
உருகி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தேன் தொழுதும் எழு முருகு வண்டுண் மலர்க்கைதையின் நீழலில் முன்னொரு நாள் பெருகு காதன்மை என்னுள்ளம் எய்தப் பிரிந்தான் இடம் பொருது முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே –9-3-2
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenjee - மனமே! (- (பின்னை என்ன செய்யவேணுமென்கிறாயோ, கேள்;))
இங்கு இருந்து, Ingu Irundhu - இங்கேயிருந்துகொண்டு
நினைந்து, Ninaindhu - சீந்தித்து
உருகி, Urugi - உருகுவதனால் என்னபயன்?
வண்டு, Vandu - வண்டுகள்
முருகு உண், Murugu Un - தேனுண்ணப் பெற்ற
மலர், Malar - பூவையுடைத்தான
கைதையின், Kaithaiyin - தாழையினுடைய
நீழலில், Neelalil - நிழலிலே
முன் ஒருநாள், Mun Orunaal - முன்பொருநாள்
என் உள்ளம், En Ullam - என்னெஞ்சானது
பெருகு காதன்மை எய்த, Perugu Kaadhanmai Eydha - மிக்க ஆவல்கொள்ளும்படி
பிரிந்தான், Pirindhaan - பிரிந்துபோன பெருமானுடைய
இடம், Idam - இருப்பிடமாயும்
முந்நீர், Munnir - கடவானது
பொருது, Porudhu - அலையெறிந்து
கரைக்கே, Karaikkai - கரையிலே
மணி உந்து, Mani Unthu - ரத்னங்களைக் கொழித்துத் தள்ளுமிடமாயுமுள்ள
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
தொழுதும், Thozhudum - சென்றுவணங்குவோம்;
எழு, Ezhu - எழுந்திரு