திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1771 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1771பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் ஆர்த்தர் இல்லை இறே – ஆர்த்தர்க்கு உத்தேச்யம் சென்று பெற வேண்டாதே இருந்த இடத்தே கொடு வந்து தள்ளும் தேசம் ஆயிற்று – பாவியேன் -அத்தேசத்தின் படி அவனுக்கும் உண்டாகப் பெற்றிலோமே) 4
கொங்குண் வண்டே கரியாக வந்தான் கொடியேற்கு முன் நங்கள் ஈசன் நமக்கே பணித்த மொழி செய்திலன் மங்கை நல்லாய் தொழுதும் எழு போயவன் மன்னுமூர் பொங்கு முந்நீர்க் கரைக்கே மணி யுந்து புல்லாணியே –9-3-4
பதவுரை Show / Hide
நல் மங்காய், Nal Mangai - உயிர்த்தோழியே!, (- (ஆதலால்) (போய் தொழுதும் எழு))
கொங்கு உண்டே கரி ஆக, Kongu Unde Kari Aaga - தேனுண்கிறவண்டு ஒன்றே ஸாக்ஷியாக (பிறரொருவருமறியாதபடி)
கொடியேற்கு வந்தான், Kodiyerku Vandhaan - பாலியான என்பக்கல் விக்கு) வந்தனான
நங்கள் ஈசன், Nangal Eesan - எம்பெருமான்
முன், Mun - முன்பு
நமக்கே பணித்த, Namakke Panitha - நமக்குச் சொல்லி வைத்த
மொழி, Mozhi - சொற்படி
செயிதிலன், Seyithilan - நடத்தவில்லை;
அவன் மன்னும் ஊர், Avan Mannum Oor - அப்பெருமான் பொருந்தி வாழுமிடமாயும்
பொங்கு முந்நீர், Pongu Munnir - அலைமோதுகின்ற கடலானது
கரைக்கே, Karaikkai - கரையோரத்திலே
மணி உந்து, Mani Unthu - ரத்னங்களைக் கொழித்துத்தள் ளுமிடமாயுமுள்ள
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை