திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1772 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1772பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழே மறக்க ஒண்ணாது என்றது இறே-இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது – மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது-அவை இரண்டும் அரிதாக நின்றது உணரில் -உள்ளம் சுடுமால்–என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை) 5
உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின் தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம் புணரி யோதம் பணில மணி யுந்து புல்லாணியே –9-3-5
பதவுரை Show / Hide
வினையேன், Vinaiyen - பாவியான நான் (- (தோழீ!) தொழுதும் எழு-;)
உணரில், Unaril - நினைத்தமாத்திரத்தில்
உள்ளம் சுடும், Ullam Sudum - நெஞ்சு வேம்;
ஆல், Aal - அந்தோ! ;
துணரின் நாழல் ஈறு போது, Thunarin Naazhal Eeru Podhu - பூங்கொத்துக்களை யுடைத்தான நாழலின் மணம் மிக்க புஷ்பங்களை
நம் சூழல், Nam Soozhal - நமது பரந்த கூந்தலிலே
பெய்து, Peidhu - சூட்டி
பின் தணரில் ஆவிதளரும் என அன்பு தந்தான், Pin Thanaril Aavithalarum Ena Anbu Thandhan - ;இனி விட்டுப் பிரிந்தால் உயிர் தடுமாறிப் போகும்; என்னும்படியான அன்பைக் கொண்டிருந்து (விட்டுப் பிரிந்த) பெருமானுடைய
இடம், Idam - உறைவிடமாயும்
புணரி ஓதம், Punari Otham - கடலலைகளானவை
பணிலம், Panilam - சங்குகளையும்
மணி, Mani - ரத்னங்களையும்
உந்து, Undhu - ஒதுக்கித் தள்ளுமிடமாயுள்ள
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை