திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1779 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1779பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நோவு படுகை நமக்கே ஸ்வ பாவமாய் விட்டது என்று ஒரு வார்த்தை சொல்லி பின்பு பேசாதே இருக்கும் பிரகிருதி அன்றே – தான் இருக்கிற இடத்தே வர்த்திக்கிற சில பஷிகளை தூது விடுகிறாளாயிற்று சுலபன் அல்லாதவனை ஆசைப் பட்டு உடம்பு வெளுத்து இருக்கிறேனோ அது தான் பரத்வம் என்னும் படி இருக்கிற இடத்தே என் தசையை அறிவுயுங்கள் -என்கிறாள்) 2
முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டளந்த மன்னன் சரிதைக்கே மாலகிப் பொன் பயந்தேன் பொன்னங்கழிக் கானல் புள்ளினங்காள் புல்லாணி அன்னமாய் நூல் பயந்தார்க்கு ஆங்கு இதனைச் செப்புமினே –9-4-2
பதவுரை Show / Hide
பொன்னங் கழி கானல், Ponnang Kazhi Kaanal - பொன்னங்கழி யென்கிற கடற் கரைநிலங்களிலுள்ள
புள் இனங்கள், Pul Inangal - பறவையினங்களே!,
முன்னம், Munnam - முன்பொருகால்
குறள் உரு ஆய், Kural Uru Aayi - வாமநரூபியாகி (மாவலிபக்கல்)
மூ அடி மண்கொண்டு, Moo Adi Mankondru - மூவடிநிலத்தை இரந்து பெற்று
அளந்த, Alandha - (மூவுலகையும்) அளந்து கொண்ட
மன்னன், Mannan - தேவாதிதேவனுடைய செயலுக்கே
மால் ஆகி, Maal Aagi - நான் வியாமோஹ மடைந்த வளாகி
பொன் பயந்தேன், Pon Payandhen - நிறவேறுபாடு அடைந்தவளானேன்;
இதனை, Idhanai - எனது இந்த நிலைமையை
புல்லாணி ஆங்கு, Pullaani Aangu - திருப்புல்லாணியென்கிற அவ்விடத்திலே சென்று,
அன்னம் ஆய் நூல் பயந்தாற்கு, Annam Aayi Nool Payandhaarku - ஹம்ஸரூபியாய் வேதசாஸ்த்ரங்களை உபகரித்தபெருமானுக்கு
செப்புமின், Seppumin - சொல்லுங்கள்.