திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1780 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழே என்னுடைய உடம்பில் நோவை அறிவியுங்கோள் என்றாள் இங்கு என்னுடைய சிந்தா வ்யதையை அறிவியுங்கோள் -என்கிறாள்) 3 | வவ்வித் துழாயதன் மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வியறியாது நிற்கும் கொல் நித்திலங்கள்
பவ்வத்திரை யுலவு புல்லாணி கை தொழுதேன்
தெய்வச் சிலையார்க்கு என் சிந்தை நோய் செப்புமினே –9-4-3 | பதவுரை Show / Hideதுழாய்அதன் மேல் வவ்லி, Thuzhai Adhan Mel Vavli - (தலைவனது) திருத்துழாய் மாலையைப் பற்றிக்கொண்டு சென்ற, Sendra - புறப்பட்டுப் போன, தனி நெஞ்சம், Thani Nenjam - (எனது) தனிப்பட்டமனமானது செவ்லி அறியாது நிற்கும் கொல், Sevli Ariyaadhu Nirkkum Kol - முறையறியாமல் (அவ்விடத்தே) தாமதித்திருக்குமோ? பவ்வம் திரை, Pavvam Thirai - கடலலைகளில் நித்திலங்கள் உலவு, Niththilangal Ulavu - முத்துக்கள் உலாவப்பெற்ற புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை கைதொழுதேன், Kaithozhuthen - கையெடுத்துத் தொழுதவளான என், En - என்னுடைய சிந்தை நோய், Sindhai Noi - மநோவியாதியை தெய்வம் சிலையாற்கு, Deivam Silaiyarku - திவ்யமான வில்லையுடைய ரானபெருமாளுக்கு செப்புமின், Seppumin - (பறவைகளே!) சொல்லுங்கள். |