திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1781 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1781பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு பாலனுக்கு தமப்பன் பகையாக உதவிக் கார்யம் செய்தவன் அபலைக்குத் தன்னைப் பெறாமையாலே வந்த வ்யசனத்துக்கு வாசி வைத்து உதவின படி காண் –என் உடம்பிலே கண்ண நீரையும் உண்டாம் படி பண்ணினான்) 4
பரிய விரணியதாக மணி யுகிரால் அரியுருவாய்க் கீண்டான் அருள் தந்தவா நமக்குப் பொரு திரைகள் போந்துலவு புல்லாணி கை தொழுதேன் அரி மலர்க் கண்ணீர் ததும்ப வந்துகிலும் நில்லாவே –9-4-4
பதவுரை Show / Hide
பரிய, Pariya - பருத்த
இரணியானது, Iraniyanathu - இரணியாசுரனுடைய
ஆகம், Aagam - மார்பை
அரி உரு ஆய், Ari Uru Aay - நரஸிம்ஹ ரூபியாய்
அணி உகிரால், Ani Ukiraal - அழகிய நகங்களாலே
கீண்டான், Keendaan - கிழித்தொழித்த பெருமான் நம்விஷயத்திலே
அருள் தந்த ஆ, Arul Thanda Aa - கிருபைபண்ணின விதம் என்னே!;
பொரு திரைகள், Poru Thiraigal - ஒன்றின்மேலொன்றாக ஏறித் துவருகிற அலைகள்
போந்து உலவு, Pondhu Ulavu - கிட்டவந்து உலாவப் பெற்ற
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
கைதொழுதேன், Kaithozhuthen - தொழுதவளான என்னுடைய
அரி மலர்கண், Ari Malarkann - வண்டுபடிந்த பூப்போன்ற கண்களின்று
நீர்ததும்ப, Neerthadum - நீர்தளும்ப
அம் துகிலும், Am Thugilum - அழகிய வஸ்த்ரமும்
நில்லா, Nilla - அரையில் தங்குகின்றதில்லை.