திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1784 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1784பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சௌபரி ஐம்பது வடிவு கொண்டு புஜித்தால் போலே ரத்னங்களால் பண்ணப் பட்ட மாடங்கள் தோறும் தானும் அவனுமாய் அனுபவிக்கக் காணும் கோலிற்று – அது எல்லாம் செய்து சமைந்தேன் – அப்ராப்யத்தை ஆசைப் படும்படியான பாபத்தை பண்ணின என் மேலே – வேலையும் வெந்தழலே வீசுமே —இந்த த்வனிக்கு சேஷித்தது உண்டாகா கொண்டு பிரமியா நின்று இவள் தன் விரஹ அக்னி தன் மேல் படாத படி கடக்க நின்று வீசா நின்றதாயிற்று) 7
கனை ஆர் இடி குரலின் கார் மணியின் நா வாடல் தினை யேனும் நில்லாது தீயில் கொடிதாலோ புனையார் மணி மாடப் புல்லாணி கை தொழுதேன் வினையேன் மேல் வேலையும் வெந்தழலே வீசுமே –9-4-7
பதவுரை Show / Hide
கனை ஆர்இடி குரலின், Kanai Aaridi Kuralin - இடியிடித்தாற்போன்று மிக்க த்வநியோடு கூடின
கார், Kaar - கறுத்த
மணியின், Maniyin - (மாட்டின் கழுத்திலுள்ள) மணியின்
நா ஆடல், Naa Aadal - நாக்கு அசைந்து ஒலிப்ப தானது
தினையேனும் நில்லாது, Dhinaiyenum Nilladhu - தினையளவும் (கொஞ்சமும்) ஓயாமல்
தீயின், Theeyin - நெருப்பைக் காட்டிலும்
கொடிது, Kodithu - கொடுமைபுரியாநின்றது;
புனை ஆர்மணி மாடம், Punar Aarmani Maadam - அழகுமிக்க மணிமாடங்களை யுடைய
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை
கைதொழுதேன், Kaithozhuthen - தொழுவதற்கு ஆசைப்பட்டவளான
வினையேன் மேல், Vinaikyen Mel - பாவியேன் மேல்
வேலையும், Velaiyum - கடல்தானும்
வெம் தழலே, Vem Thazhale - வெவ்விய நெருப்பையே
வீசும், Veeseum - வீசுகின்றது.