திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1785 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரபல விரோதிகளை ஆற்றி உகந்தாருக்கு தன்னைக் கொடுக்க கடவனாக ஆசைப் பட்ட நமக்கு நம் விரோதிகளை மாற்றி நமக்கு தன்னை தந்தபடி காண்) 8 | தூம்புடைக் கை வேழம் வெருவ மருப்பொசித்த
பாம்பின் அணையான் அருள் தந்தவா நமக்குப்
பூஞ்செருந்திப் பொன் சொரியும் புல்லாணிக் கை தொழுதேன்
தேம்பல் இளம் பிறையும் என்தனக்கு ஓர் வெந்தழலே –9-4-8 | பதவுரை Show / Hideதூம்பு உடை கை வேழம், Thoombu Udai Kai Vezham - துளையையுடையத்தான துதிக் கையையுடைய (குவலயாபீடமென்னும்) யானையானது வெருவ, Veruva - அச்சமுறும்படி மருப்பு ஒசித்த, Maruppu Osiththa - (அதன்) கொம்புகளை முறித்த பாம்பின் அணையான், Paampin Anaiyaan - சேஷசாயியான பெருமான் கைதொழுதேன், Kaithozhuthen - தொழுவதற்கு ஆசைப்பட்டவளான என் தனக்கு, En Thanakku - எனக்கு நமக்கு, Namakku - நம் திறத்தில் அருள் தந்த ஆ, Arul Thanda Aa - அருள் செய்தவிதம் என்னே!; பூ, Poo - அழகிய செருந்தி, Serunthi - சுரபுன்னைமரங்கள் பொன் சொரியும், Pon Soriyum - பொன்போன்ற மலர்களை உதிர்க்குமிடமான புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை தேம்பல் இளபிறையும், Thembal Ilapiraiyum - மிக இளைய சந்திரனும் ஓர்வெம் தழல், Orvem Thazhal - வெவ்விய நெருப்புப்போலுள்ளான |