திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1786 | பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஜகதா காரனாய் இருக்கிறவன் –அபேஷியாது இருக்க இவற்றை உண்டாக்கினவன் அபேஷை உடைய நம் கார்யம் செய்த படி காண் – சாமான்யத்திலே பண்ணக் கடவது விசேஷணத்தில் அன்றிக்கே இருப்பதே நாட்டுக்கு இட்ட அக்கம் -தான்யாதிகள் -அந்தப் புரத்துக்கு அரிதாவதே) 9 | வேதமும் வேள்வியும் விண்ணும் இரு சுடரும்
ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்குப்
போதலரும் புன்னை சூழ் புல்லாணி கை தொழுதேன்
ஒதமும் நானும் உறங்காது இருந்தேனே –9-4-9 | பதவுரை Show / Hideவேதமும், Vedhamum - வேதஸ்வரூபியாகவும் வேள்வியும், Velviyum - யஜ்ஞஸ்வரூபியாகவும் விண்ணும், Vinnum - மேலுலகங்களாகவும் இரு சுடரும், Iru Sudarum - சந்திரஸூர்யர்களாகவும் ஆதியும், Aadhiyum - ஜகத்காரண பூதகனாகவும் ஆனான், Aanaan - ஆன பெருமான் நமக்கு, Namakku - நம் திறத்திலே அருள் தந்த ஆ, Arul Thanda Aa - அருள் செய்தவிதம் என்னே!; போது அலரும், Podhu Alarum - பூக்கள் மலரப்பெற்ற புன்னை சூழ், Punnai Soozh - புன்னைமரங்களால் சூழப்பட்ட புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை கைதொழுதேன், Kaithozhuthen - தொழவிரும்பியவளான நானும், Naanum - நானும் ஓதமும், Othathum - கடலும் உறங்காது இருந்தேன், Urangathu Irundhen - கண்ணுறக்கமற் றிருக்கிறோம். |