திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1787 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1787பெரிய திருமொழி || (9-4–காவார்) (திரு புல்லாணி 2) - (பிரிவு ஆற்றாத தலைவி பறவைகளைத் தூது விட்டும் பிறை தென்றல் முதலியவற்றால் வருந்தியும் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த ஸ்ரீ திரு மொழியை அப்யசிக்க வல்லார் –இங்கும் குறைவற அனுபவித்து அங்கும் குறைவற அனுபவிக்கப் பெறுவார்கள்) 10
பொன்னலரும் புன்னை சூழ் புல்லாணி யம்மானை மின்னிடையார் வேட்கை நோய் கூர விருந்ததனைக் கன்னவிலும் திண தோள் கலியன் ஒலி வல்லார் மன்னவராய் மண்ணாண்டு வானாளும் உன்னுவரே –9-4-10
பதவுரை Show / Hide
பொன் அலரும் புன்னை சூழ், Pon Alarum Punnai Soozh - பொன் போன்ற பூக்கள் மலரப்பெற்ற புன்னை மரங்களால் சூழப்பட்ட
புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியி லெழுந்தருளியிருக்கிற
அம்மானை, Ammaanai - எம்பெருமான் விஷயத்திலே
மின் இடையார், Min Idaiyaar - மின்னல்போல் நுண்ணிய இடையை யுடையரான பெண் பிறந்தவர்கள்
வேட்கை நோய் கூர, Vetkai Noi Koora - ஆசை நோய் மிகும்படியாக
இருந்தனை, Irundhanai - இருக்கும் நிலைமையைப் பற்றி
கல் நவிலும் திண்தோள் கலியன், Kal Navilum Thinthol Kalyan - மலையென்று போற்றத் தகுந்த திண்ணிய திருத்தோள்களை யுடையரான ஆழ்வார்
ஒலி, Oli - அருளிச் செய்த இப்பாசுரங்களை
வல்லார், Vallar - கற்று வல்லவர்கள்
மன்னவர்  ஆய், Mannavar Aay - அரசர்களாகி
மண் ஆண்டு, Man Aandu - பூமியை ஆட்சிபுரிந்து (பிறகு)
வான் நாடும், Vaan Naadum - பரமபத நாட்டிற்கும்
உன்னுவர், Unnuvar - விரைந்தெழுவர்