திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1789 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1789பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்முடைய ப்ராவண்யத்தை குண ஹானியாக உப பாதிக்கை அன்றிக்கே – ந கச்சின் ந அபராத்யதி -என்று பொறுப்பித்து அவன் திருவடிகளோடு சேர்க்குமவள் இருந்த இடத்தே கொடுபோய் பொகடுங்கள்) 2
தாதவிழ் மல்லிகை புல்லி வந்த தண் மதியின் இளவாடை இன்னே ஊதை திரி தந்து உழறி உண்ண ஓர் இரவும் உறங்கேன் உறங்கும் பேதையர் பேதமையால் இருந்து பேசிலும் பேசுக பெய் வளையார் கோதை நறு மலர் மங்கை மார்பன் குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-2
பதவுரை Show / Hide
தாது அவிழ் மல்லிகை, Thadu Avizh Malligai - தாதுகள் விரிகிற மல்லிகைகளிலே (- (தோழிமார்களே!) (குறுங்குடிக்கே *** மின்.))
புல்கி, Pulki - போய் அணைந்து
தண் மதியின், Than Mathiyin - குளிர்ந்த சந்தியனோடுகூட
இன்னே வந்த, Innae Vantha - இப்படிவந்து வீசுகின்ற
இளவாடை, Ilavaadai - மந்தமாருதமாகிற
ஊதை, Oothai - குளிர்காற்றானது
திரிதந்து, Thirithandu - இங்குமங்கும் உலாவி
உழறி உண்ண, Uzhari Unna - துகைத்துமுடிக்க
ஓர்இரவும், Ooriravum - ஒரு ராத்திரியும்
உறங்கேன், Uranken - உறங்காதிருக்கிறேன்;
பெய் வளையர், Pey Valaiyar - கைவளை கழலாதவர்களாய்
உறங்கும் பேதையர், Urankum Paedaiyar - உறக்கமே போதுபோக்கான விவேகமற்ற பெண்கள்
பேதைமையால், Paedaimaiyaal - தங்கள் அறிவீனத்தினால்
இருந்து, Irundhu - வேலையற்றறிருந்து
பேசிலும் பேச்சு, Pesilum Peichu - (என் விஷயமாக) என்ன பழி சொன்னாலும் சொல்லட்டும்;
கோதை, Kothai - கூந்தலிலே
நறுமலர், Narumalai - மணமிக்க பூக்களை அணிந்துள்ள
மங்கை, Mangai - மணம்மிக்க பூக்களை அணிந்துள்ள
மார்பன், Maarban - திருமார்பிலேயுடைய பெருமானது