திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1791 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1791பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அயர்வறும் அமரர்கள் தங்களுக்கு முடி மேலே மணியாக வைத்த சிரோ பூஷணமாக வைக்கப் பட்ட – அவனுடைய பெருமை பேசி-ஒரு மணி யோசை என் உள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் -என்னுதல்- பேச -என்றதாகில்-ஒருவனுடைய நீர்மை இருக்கும் படியே ஒருவனைப் பிரிந்து ஒருத்தி படும் பாடே -என்று இரண்டு இடத்திலும் உள்ளாறும் நின்று சொல்லும்படியாக -என்றாகிறது) 4
கரு மணி பூண்டு வெண்ணாகணைந்து காரி இமில் ஏறு அணர் தாழ்ந்து உலாவும் ஒரு மணி யோசை என்னுள்ளம் தள்ள ஓர் இரவும் உறங்காது இருப்பேன் பெரு மணி வானவருச்சிவைத்த பேரருளாளன் பெருமை பேசி குரு மணி நீர் கொழிக்கும் புறவில் குறுங்குடிக்கே யென்னை உய்த்திடுமின் –9-5-4
பதவுரை Show / Hide
கருமணி பூண்டு, Karumani Poondhu - கறுத்தமணியைத் தரித்துக் கொண்டு (- (உறங்காது இருப்பேன்) (என்னை உய்த்திடுமின்-.))
வெண் நாகு அணைத்து, Ven Naaku Anaithu - வெளுத்த நாகுகளோடே அணைத்து
கார்இமில், Kaarimill - கறுத்த முகப்பபை யடைத்தான
எறு, Eru - காளைகளினுடைய
அணர், Anar - கழுத்திலே
தாழ்ந்து உலாவும், Thaazhnthu Ulaavum - தொங்குகின்ற
ஒரு மணி, Oru Mani - ஒரு மணியினுடைய
ஓசை, Osai - ஒலியானது
என் உள்ளம், En Ullam - என் நெஞ்சை
தள்ள, Thalla - சோர்வு படுத்த
ஓர் இரவும், Or Iravum - ஒரு ராத்திரியும்
வானவர், Vaanavar - நித்யஸூர்கள்
உச்சி, Uchi - தங்கள் தலைமீது
பெரு மணி, Peru Mani - சிறந்த ரத்னமாக
வைத்த, Vaitha - வைத்துப் போற்றுகிற
பெருமை, Perumai - பெருமைகளை
பேசி, Paesi - பேசிக்கொண்டு
நீர்குரு மணி கொழிக்கும் புறவின் குறுங்குடிக்கே, Neerkuru Mani Kozhikkum Puravin Kurungkudikke - ப்ரவாஹஜலமானது சிறந்த ரத்னங்களைக் கொண்டு தள்ளுகின்ற புறவுகளையுடைய திருக்குறுங்குடியிலேயே