திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1792 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1792பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (முன்பு சொன்னவை போல் அன்றிக்கே தனித் தனியே இவை முடித்து விடுமா போலே இரா நின்றது – தண் மலர்த் தென்றலோடு அன்றில் ஒன்றி -என்னச் செய்தே பின்னையும் ஜீவித்து இருந்தோம் இறே – இவை நம்மை வைப்பன வன்றிக்கே இரா நின்றன) 5
திண் இமில் ஏற்றின் மணியும் ஆயன் தீங்குழ லோசையும் தென்றலோடு கொண்டதோர் மாலையும் அந்தி ஈன்ற கோல விளம்பிறையோடு கூடி பண்டை வல்லவிவை நமக்குப் பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும் கொண்டல் மணி நிற வண்ணர் மன்னு குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-5
பதவுரை Show / Hide
திண் திமில், Thin Thimil - திடமான முசுப்புடைய (- (ஆகையாலே) (குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்-.))
ஏற்றின், Aetrin - விருஷபத்தினுடைய
மணியும், Maniyum - கழுத்துமணியும்
ஆயன், Aayan - இடையனுடைய
தீம் குழல் ஓசையும், Theem Kuzhal Osaiyum - மதுரமான புல்லாங்குழ லொழியும்
தென்றலோடு கொண்டது ஓர்மாலையும், Thendralodu Kondathu Ormaalaiyum - தென்றற்காற்றோடு ஒருமித்த கோட்பாட்டை யுடையதான மாலைப்பொழுதும் ஆகிய
இவை, Ivai - இவை
அந்தி ஈன்ற, Andhi Eendra - அந்திப்பொழுது தோற்றுவிக்கிற
கோலம் இளபிறை யோடு கூடி, Kolam Ilapirai Yodu Koodi - அழகிய இளம்பிறைச் சந்தி ரனையும் துணைகூட்டிக் கொண்டு
நமக்கு, Namakku - நம் விஷயத்திலே
பண்டைய அல்ல, Pandaiya Alla - முன் இருந்தாற்போலிருக்கின்றனவில்லை;
பாவியேன், Paaviyen - பாவியான என்னுடைய
ஆவியை, Aaviye - உயிரை
வாட்டம் செய்யும், Vattam Seyyum - வாடச் செய்கின்றன;
கொண்டல் மணி நிறம் வண்ணர், Kondal Mani Niram Vannarar - மேகத்தினுடையவும் நீலமணியினுடையவும் நிறம் போன்ற நிறமுடைய பெருமாள் பொருந்திவாழப்பெற்ற