திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1794 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1794பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிரியேன் என்கிற பாசுரத்தாலே பிரிவை உணர்த்தினான் ஆயிற்று – வ்யதிரேகத்தால் அறிந்து கொள்கிறாள் என்று – இவர் பிரியேன் என்கிற பாசுரத்தாலே யாகிலும் சொன்னார் அதுவும் வாய் கொண்டு சொல்ல மாட்டாமை -ஆது கொலோ -என்கிறாள் ஆயிற்று -இவள்) 7
செங்கண் நெடிய கரிய மேனித் தேவர் ஒருவர் இங்கே புகுந்து என அங்கம் மெலிய வளை கழல ஆது கொலோ வென்று சொன்ன பின்னை ஐங்கணை வில்லி தன்னாண்மை என்னோடு ஆடுமதனை யறிய மாட்டேன் கொங்கலர் தண் பனை சூழ் புறவில் குறுங்குடிக்கே என்னை யுய்த்திடுமின் –9-5-7
பதவுரை Show / Hide
நெடிய செம்கண், Nedhiya Semkan - நீண்டு சிவந்த திருக்கண்களையும் (- (குறுங்குடிக்கே, என்னை உய்த்திடுமின்))
கரிய மேனி, Kariya Meeni - கறுத்த திருமேனியையுமுடையரான
தேவர் ஒருவர், Thevar Oruthar - ஒரு பெருமாள்
இங்கே புகுந்து, Inge Pugundhu - இங்கு எழுந்தருளி
என் அங்கம் மெலிய, En Angam Meliya - எனது உடல் இளைக்கும்படியாகவும்
வளை கழல, Valai Kazhala - வளைகள் கழன்றொழியும்படி யாகவும்
ஆது கொலோ என்று சொன்ன பின்னை, Aathu Koloo Endru Sonna Pinnai - அப்படிப்பட்ட பிரிவை உணர்த்தினது முதலாக
ஐங் கணை வில்லி, Aing Kanai Villi - ஐந்து அம்புகளையுடைய வில்லை ஆள்பவனான மன்மதன்
என்னோடு ஆடும், Ennodu Aaduum - என்விஷயத்திலே காட்டுகின்ற
தன் ஆண்மை அதனை, Than Aanmai Adhanai - தன்னுடைய பௌருஷத்தை
அறிய மாட்டேன், Ariya Maatten - (எடுத்துச்செல்ல) அறிகின்றிலேன் ;
கொங்கு அலர், Kongu Alar - தேன் ஒழுகுகின்ற
தண், Than - குளிர்ந்த
பணை, Panai - மரக்கொம்புகளால்
சூழ், Sool - சூழப்பட்ட
புறவின், Puravin - புறவுகளை யுடைய