திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1795 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1795பெரிய திருமொழி || (9-5–தவள இளம்பிறை) (திருக்குறுங்குடி 1) - (பிரிவு ஆற்றாத தலைவி தலைவன் இருக்கும் இடத்தில் தன்னைக் கொண்டு சேர்க்குமாறு தோழியரை வேண்டுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பந்துக்களை நோக்கிச் சொல்லுகிற வார்த்தை இறே – க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்கலாம் படி அன்று -இங்கு ஓடுகிற தசை இனி அங்கே போய்ப் புக்காலும் அவன் தன்னாலே பேறாம் படி எனக்கு பிரயோஜனம் உள்ளது – அதில் அவன் கருத்து அறிந்த படியையும் அறிந்து கார்யம் செய்யப் பாருங்கோள் – உனக்கு க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க ஒண்ணாமைக்கு இப்போது வந்தது என -என்ன) 8
கேவலம் அன்று கடலின் ஓசை கேண்மின்கள் ஆயன் கை யாம்பல் வந்து என ஆவி யளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்து இட்டு ஏவலம் காட்டி யிவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடா முன் கோவலர் கூத்தன் குறிப்பறிந்து குறுங்குடிக்கே யென்னை யுய்த்திடுமின் –9-5-8
பதவுரை Show / Hide
கடலின் ஓசை, Kadalin Osai - ஸமுத்ரகோஷமானது (- (குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்))
கேவலம் அன்று, Kevalam Andru - ஸாமாந்யமன்று;
கேண்மின்கள், Keenmingal - கேளுங்கள் ;
ஆயன், Aayan - கோபாலனுடைய
கை, Kai - கையிலுள்ள
ஆம்பல் வந்து, Aambal Vandu - குழலோசை வந்து
என் ஆவி அளவும் அணைந்து நிற்கும், En Aavi Alavum Anaindhu Nirkum - என்னுடைய பிராணன் வரையில் கிட்டி நிற்கின்றது;
அன்றியும், Andriyum - அதற்கு மேலும்
இவன் ஒருவன், Ivan Oruvan - (மன்மதனென்கிற) இப்பாவியொருவன்
ஐந்து கணை, Ainthu Kanai - தனது) பஞ்சபாணங்களை
தெரிந்திட்டு, Therindittu - நன்றாக ஆராய்ந்து
ஏவலம் காட்டி, Evalam Kaatti - பிரயோகிக்க வல்லஸாமர்த்தியத்தைக் காண்பித்து
இப்படியே புகுந்து, Ippadiye Pugundhu - என்மேல் நோக்கம் வைத்து
எய்திடா முன், Eythida Mun - பிரயோகிப்பதற்கு முன்னமே
கோவலர்கூத்தன், Kovalarkootthan - இடைச்சாதிக்கு ஏற்ற கூத்துகளில் வல்லவனான பெருமானுடைய
குறிப்பு, Kurippu - திருவுள்ளக்கருத்தை
அறிந்து, Arindhu - தெரிந்துகொண்டு