திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1798 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஈஸ்வர அபிமாநிகளாய் இருப்பர்க்கும் முகம் கொடுத்துக் கொண்டு இருக்குமவன் அனுகூலராய்ச் சென்று கிட்டுகிற நமக்கு முகம் தரச் சொல்ல வேணுமோ – ரஷ்ய ரஷக பாவம் மாறாதே போரும் தேசமாயிற்று-சீலாவானாய் இருக்கிறவன் வர்த்திக்கிற தேசம் – அவ் ஊரில் மரங்களுக்கும் அவன் படி உண்டு என்கிறார்) 1 | அக்கும் புலியின தளமுடையார் அவரொருவர்
பக்கம் நிற்க நின்ற பண்பரூர் போலும்
தக்க மரத்தின் தாழ்சினை ஏறி தாய் வாயில்
கொக்கின் பிள்ளை வெள்ளிற வுண்ணும் குறுங்குடியே –9-6-1 | பதவுரை Show / Hideகொக்கின் பிள்ளை, Kokkin Pillai - கொக்கின் குட்டியானது தக்கமரத்தின், Thakkamarathin - (தனக்கு ஏறத்) தகுந்ததான தாழ்ந்த கிளையில் ஏறி தாழ் சினை ஏறி, Thazh Sinai Eri - தாழ்ந்த கிளையில் ஏறி தாய் வாயில், Thai Vayil - தாய்கொக்கின் வாயிலிருக்கிற வெள்ளிறவு, Velliravu - ‘வெள்ளிறா’ என்னும் சாதிமீனை உண்ணும், Unnum - உண்ணப்பெற்ற குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியென்னும் தலமானது, அக்கும், Akum - எலும்பையும் புலியின அதளும், Puliyin Adhalum - புலியின் தோலையும் உடையார் அவர் ஒருவர், Udaiyar Avar Oruthar - உடையவரான சிவபிரானாகிற ஒருவர் பக்கம் நிற்க, Pakkam Nirka - அருகேயிருக்க (இடங்கொடுத்து) நின்ற, Nindra - எழுந்தருளியிருக்கின்ற பண்பர், Panbar - சீலகுணமுடையரான பெருமாளுடைய ஊர் போலும், Oor Polum - திவ்யதேசமாம். |