திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1799 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற அழகு எளியர்க்கு கிட்ட ஒண்ணாமை அன்றிக்கே ப்ரஹ்மாதிகளுக்கும் அகப்பட இக்கரையிலே நின்று கூப்பிடும்படி ஸ்ரீ சர்வாதிகனாய் இருக்கிறவன் எல்லாருக்கும் ஒக்க அனுபவிக்கலாம் படி வர்த்திக்கிற தேசம் ஸ்ரீ திருக் குறுங்குடி என்கிறார் – கீழே நின்ற நம்பி அனுபவம்-இதில் கிடந்த நம்பி அனுபவம்) 2 | துங்க வரவத் திரை வந்துலவத் தொடு கடலுள்
பொங்கா ரரவில் துயிலும் புநிதரூர் போலும்
செங்கால அன்னம் திகழ் தண் பணையில் பெடையோடும்
கொங்கார் கமலத் தலரில் சேரும் குறுங்குடியே –9-6-2 | பதவுரை Show / Hideசெம் கால், Sem Kaal - சிவந்தகால்களையுடைய (- (ஊர் போலும்)) அன்னம், Annam - அன்னப்பறவை திகழ் தண் பணையில், Thigal Than Panaiyil - அழகிய குளிர்ந்த நீர் நிலைகளிலே கொங்கு ஆர் கமலத்து அலரில், Kongu Aar Kamalathu Alaril - மணம்மிக்க தாமரைப்பூவில் பெடையோடும், Pedaiyodum - பேடையுடனே சேரும், Serum - சேர்ந்துவாழுமிடமான குறுங்குடி, Kurungkudi - குறுங்குடியானது துங்கம், Thungam - ஓங்கினவைகளாய் ஆர் அரவம், Aar Aravam - பெரிய ஆரவாரத்தை யுடையவைகளான திரை, Thirai - அலைகள் வந்து உலவ, Vandu Ulava - வந்து வீச தொடு கடலுள், Thodu Kadalul - ஆழ்ந்த திருப்பாற்கடலிலே பொங்கு ஆர் அரவில், Pongu Aar Aravil - பெரிய திருமேனி வாய்ந்த திருவனந்தாழ்வான் மீது துயிலும், Thuyilum - திருக்கண்வளர்ந்தருளா நின்ற புனிதர், Punithar - பரமபவித்திரரான பெருமாளுடைய |