திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1805 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நம்மோடு ஒரு சம்பந்தம் உடைய நீங்கள் –பர பக்தி உக்தராய்க் கொண்டு -வகுத்த ஸ்வாமி யானவன் இருக்கிற தேசத்தை சென்று அடையுங்கோள்) 8 | நாராரிண்டை நாண் மலர் கொண்டு நந்தமர்காள்
ஆராவன்போடு எம்பெருமானூர் அடைமின்கள்
தாராவாரும் வார் புனல் மேய்ந்து வயல் வாழும்
கூர்வாய் நாரை பேடையோடாடும் குறுங்குடியே –9-6-8 | பதவுரை Show / Hideநம் தமர்காள், Nam Thamarkal - நம்மோடொத்த பகவத்பக்தர்களே! (- (எம்பெருமான் ஊர் அடைமின்கள்)) நார் ஆர் இண்டை, Naar Aar Indai - நார்களில் நெருங்கக் கோக்கப்பட்ட மாலைகளையும் நாள் மலர், Naal Malar - அப்போதலர்ந்த பூக்களையும் கொண்டு, Kondru - ஏந்திக் கொ;ண்டு ஆரா அன்போடு, Aaraa Anbodu - பரபக்தியுக்தராய்க் கொண்டு வார்புனல், Vaarpunal - நீண்ட நீர்நிலங்களிலே மேய்ந்து, Meiyndhu - இரைமேய்ந்து வயல், Vayal - வயல்களில் வாழும், Vaalum - வாழ்கின்ற கூர் வாய் நாரை, Koora Vaai Naarai - கூர்மையுள்ள வாயலகுகளையுடைய நாரைகள் பேடையோடு, Pedaioodu - பேடைகளுடனே ஆடும், Aadum - களித்துவர்த்திக்கப்பெற்ற குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியென்கிற எம்பெருமான் ஊர், Emperumaan Oor - திவ்யதேசத்தை அடைமின்கள், Adaiminkal - சென்று சேருங்கள் |