திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1806 | பெரிய திருமொழி || (9-6–அக்கும் புலியின்) (திருக்குறுங்குடி 2) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (செவ்விப் பூக்களைத் தரித்துக் கொண்டு சென்று –தீர்க்க பிரமாணத்தை பண்ணுங்கோள் – வழு விலா வடிமை செய்ய வேண்டும் -என்றும் இருக்கும் நீங்கள்) 9 | நின்ற வினையும் துயரும் கெட மா மலரேந்திச்
சென்று பணிமின் எழுமின் தொழுமின் தொண்டீர்காள்
என்றும் இரவும் பகலும் வரி வண்டு இசை பாடக்
குன்றின் முல்லை மன்றிடை நாறும் குறுங்குடியே –9-6-9 | பதவுரை Show / Hideதொண்டர்காள், Thondarkal - பகவத்பக்தர்களே! நின்ற வினையும், Nindra Vinaikum - ஸஞ்சிதகருமங்களும் துயரும், Thuyarum - ப்ராரப்தகருமங்களும் கெட, Keda - ஒழியும்படியாக மா மலர், Maa Malar - சிறந்த புஷ்பங்களை ஏந்தி, Aendi - எடுத்துக்கொண்டு இரவும் பகலும் என்றும், Iravum Pagalum Endrum - இரவும் பகலுமாகிய எக்காலத்திலும் வரி வண்டு இசை பாட, Vari Vandu Isai Paada - வஜீவண்டுகள் இசை பாடப்பெற்றதும் குன்றின் முல்லை, Kundrin Mullai - மலையிலுள்ள முல்லைப் பூக்கள் மன்றிடை, Mandridai - வெளிநிலங்களிலே நாறும், Naarum - கமழப்பெற்றதுமான குறுங்குடி, Kurungkudi - திருக்குறுங்குடியை சென்று, Sendru - அடைந்து பணிமின், Panimin - ஸேவியுங்கள் தொழுமின், Thozhumin - அஞ்ஜலிபண்ணுங்கள், எழுமின், Ezhumin - (இவ்வகையாலே) உஜ்ஜீவிக்கப்பாருங்கள் |