திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1808 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1808பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சர்வமும் உப சம்ஹ்ருதம் ஆனவன்று இவற்றுக்கு லய ஸ்தானமாய்- சிருஷ்டி காலம் வந்தவாறே உத்பத்தி ஸ்தானமாய் காரணாவஸ்திதமான சித் அசித்துக்களுக்கும் நிர்வாஹகனாய் கார்ய மத்யே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்தவன் – நித்ய வாஸம் பண்ணுகிற ஸ்ரீ திரு வல்ல வாழை வாயாலே சொல்லும்படியாக நெஞ்சாலே நினைக்கப் பண்ணப் பாராய் -நெஞ்சே என்கிறார்) 1
தந்தை தாய் மக்களே சுற்றம் என்று உற்றவர் பற்றி நின்ற பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழி எனக் கருதினாயேல் அந்தமாய் யாதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனாய மைந்தனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-1
பதவுரை Show / Hide
நெஞ்சே, Nenjee - மனமே!
தந்தை, Thandai - தகப்பனென்றும்
தாய், Thaai - தாயென்றும்
மக்கள், Makkal - பிள்ளைகளென்றும்
சுற்றம், Sutram - ஜ்ஞாநிகளென்றும்
உற்றவர் என்று, Utravar Endru - மற்றும் உறவுமுறையாரென்றும்
பற்றி நின்ற, Patri Nindra - பற்றிக்கொண்டிருக்கிற
எழி என, Ezhi Ena - (இந்தவாழ்வு) அவத்யமென்றும்
கருதினாய் எல், Karuthinai El - நினைப்பாயாகில்
அந்தம் ஆய், Andham Aayi - (பிரளயத்தில்) லயத்துக்கு ஆச்ரயமாயும்
ஆதி ஆய், Aadhi Aayi - உச்பத்திஸ்தாநமாயும்
ஆதிக்கும் ஆதி ஆய், Aadhikkum Aadhi Aayi - காரணாவஸ்தையிலுள்ள சேதநாசேதநங்களுக்கும் நிர்வாஹகனாயும்
ஆயன் ஆய, Aayan Aayi - கோபாலக்ருஷ்ணனாக அவதரித்தவனாயுமுள்ள
மைந்தனார், Mainthanar - பெருமானுடைய
வல்லவாழ், Vallavaazh - திருவல்லவாழென்கிற திருப்பதியை
சொல்லும் ஆ, Sollum Aa - வாயாற்சொல்லுவதில்
வல்லை ஆய், Vallai Aayi - வல்லமையுடையையாய்
மருவு, Maruvu - பொருந்து