திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1810 | பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மகா பலியுடைய யாகத்திலே சென்று தன் அல்லாதத ஒன்றை அர்த்திப்பாரைப் போலே பூமியை அபேஷிக்க இரப்பிலே தகண் ஏறின வடிவை யுடையவர் –தம்முடைய அர்த்தித்வம் தோற்ற வந்து நிற்கிற திரு வல்ல வாழை) 3 | பூணுலா மென் முலைப் பாவைமார் பொய்யினை மெய்யிதென்று
பேணுவார் பேசுமப் பேச்சை நீ பிழை எனக் கருதினாயேல்
நீணிலா வெண் குடை வாணனார் வேள்வியில் மண்ணிரந்த
மாணியார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-3 | பதவுரை Show / Hideபூண் உலாம், Poon Ulaam - ஆபரணங்கள் விளங்குகின்ற (- (வல்லவாழ் மருவு)) மெல் முலை, Mel Mulai - மெல்லிய முலைகளையுடைய பாவைமார், Pavaimaar - ஸ்த்ரீகளினுடைய பொய்யினை, Poyyinai - சூதுகளை இது மெய் என்று பேணுவோர் பேசும் அப்பேச்சை, Idhu Mey Endru Penuvor Pesum Appechchai - இதுமெய்யென்று ஆதரிப்பவர்கள் பேசுகின்ற பிழை என நீர் கருதினால் எல், Pizhai Ena Neer Karuthinaal El - அப்படிப்பட்ட வார்த்தைகளை தப்பென்று நீ கரதுவாயாகில் நீள் நிலா வெண்குடை, Neel Nila Venkudai - பரந்த நிலாவைப்போன்று வெண்கொற்றக் குடையுடன் வாணனார், Vaananaar - வாழ்பவனான மஹாபலியினுடைய வேள்வியில், Velviyil - யாகத்திலே மண், Man - (மூவடி) மண்ணை இரந்த, Iranda - யாசித்த மாணியார், Maaniyaar - பிரமசாரி வாமகமூர்த்தி |