திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1811 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1811பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நித்ய சூரிகளுக்கு காட்சி கொடுத்துக் கொண்டு ஸ்ரீ பரமபதத்திலே இருக்கிறவர் அத்தோடு ஒரு போலியான ஒக்கத்தை உடைத்தான ஸ்ரீ திருமலையிலே வர்த்திக்கிறவர் – தர்ச நீயமான கடல் போலே இருக்கிற வடிவை உடையவர் – வர்த்திக்கிற –ஸ்ரீ திரு வல்ல வாழை – அங்கு உள்ளு நிற்கிறவர் வடிவு அழகு இருக்கிறபடி) 4
பண்ணுலா மென் மொழிப் பாவைமார் பணை முலை யணைது நாம் என்று எண்ணுவார் எண்ணமது ஒழித்து நீ பிழைத்து உய்யக் கருதினாயேல் விண்ணுளார் விண்ணின் மீதியன்ற வேங்கடதுளார் வளங்கொள் முந்நீர் வண்ணனார் வல்ல வாழ் சொல்லுமால் வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-4
பதவுரை Show / Hide
பண் உலகம், Pan Ulagam - இசைவிளங்குகின்ற (- (வல்லவாழ் மருவு))
மெல் மொழி, Mel Mozhi - இனிய பேச்சுக்களுடைய
பாவைமார், Pavaimaar - ஸ்த்ரீகளினுடைய
பணை முலை, Panai Mulai - நெருங்கின ஸ்தனங்களை
நாம் அணைத்தும் என்று, Naam Anaiththum Endru - நாம் அணைவோமென்று
எண்ணுவார், Ennavar - சிந்திப்பவர்களினுடைய
எண்ண அது ஒழித்து, Enna Adhu Ozhithu - அப்படிப்பட்ட சிந்தனையைத் தவிர்த்து
நீ பிழைத்து உய்ய கருதினால், Nee Pizhaithu Uyya Karuthinaal - நீ உஜ்ஜீவிக்க வேண்டில்,
விண் உளார், Vin Ulaar - நித்யஸூரிகளுக்காக
விண்ணின் மீது, Vinnin Meedhu - பரமபதத்தில்
இயன்ற, Iyanra - காட்சிகொடுத்துக் கொண்டிருப்பவரும்
வேங்கடத்து உளார், Vengadathu Ulaar - திருவேங்கடமலையில் எழுந்தருளியிருப்பவரும்
வளம் கொள் முந்நீர் வண்ணார், Valam Kol Munneer Vannaar - அழகிய கடல் போன்ற வடிவையுடையவருமான பெருமாளுடைய