திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1812 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1812பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நஞ்சாலே நிறைந்து இருந்துள்ள முலையின் மேலே அழகிய கையையும் வாயையும் வைத்து அவளுடைய ஆயுஸையும் முடித்த -மைந்தனார் விரோதி நிரசனமே யாத்ரையாய் இருக்கிறவர் வர்த்திக்கிற ஸ்ரீ திரு வல்ல வாழை) 5
மஞ்சு தோய் வெண் குடை மன்னராய் வாரணம் சூழ வாழ்ந்தார் துஞ்சினார் என்பதோர் சொல்லை நீ துயர் எனக் கருதினாயேல் நஞ்சு தோய் கொங்கை மேலங்கை வாய் வைத்து அவள் நாளையுண்ட மஞ்சனார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-5
பதவுரை Show / Hide
ஞ்சுதோய் வெண்குடை மன்னர் ஆய், Nanjuthoy Venkudai Mannar Aay - மேகமண்டலத்தளவு மோங்கின வெண்கொற்றக்குடையையுடைய சக்ரவர்த்திகளாய் (- (நிகருதினாய் எல்-))
வாரணம் சூழ, Vaaranam Soozha - யானைத்திரள் சூழ்
வாழ்ந்தார், Vaazndhaar - வாழ்ந்தவர்கள்
துஞ்சினார் என்பது ஓர் சொல், Thunzhinaar Enbathu Oru Sol - மாண்டு போனார்களென்கிற வார்த்தையை
துயர் என, Thuyar Ena - துக்கமென்று
நஞ்சுதோய், Nanjuthoy - விஷம்தோய்ந்த
கொங்கை மேல், Kongai Mael - (பூதனையின்) முலைமேல்
அங்கை வாய் வைத்து, Angai Vaai Vaiththu - அகங்கையையும் வாயையும் வைத்து
அவள், Aval - அப்பூதனையினது
நாளை, Naalai - ஆயுளை
உண்ட, Unda - முடித்த