திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1815 | பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொற்றாமரையை இருப்பிடமாக உடையாளான ஸ்ரீ பெரிய பிராட்டியாரும் அவளுக்குத் தகுதியான தாமும் ரகவோஹர்த்தி வைதேஹீம் -என்னுமா போலே –அவன் வரக் கடவ வழி எல்லாம் வந்து நின்றான் – வந்ததே -என்று ஒரு வார்த்தை சொல்லும் இத்தனை நீ செய்ய வேண்டுவது) 8 | மஞ்சுசேர் வானெரி நீர் நிலம் காலிவை மயங்கி நின்ற
அஞ்சு சேராக்கையை அரணம் அன்று என்று உய்யக் கருதினாயேல்
சந்துசேர் மென் முலைப் பொன் மலர்ப் பாவையும் தாமும் நாளும்
வந்துசேர் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-8 | பதவுரை Show / Hideமஞ்சு சேர் வான், Manju Seer Vaan - மேகங்கள் சேர்ந்த ஆகாசம் (- (நெஞ்சே) (வல்லவாழ் *** மருவு)) எரி, Eri - அக்நி நீர், Neer - ஜலம் நிலம், Nilam - பூமி கால், Kaal - காற்று ஆகிய இவை, Ivai - இப்பஞ்சபூதங்களும் மயங்கி நின்ற, Mayangi Nindra - கூடிவர்த்திக்கிற அஞ்சு சேர் ஆக்கையை, Anju Seer Aakkaiyai - பாஞ்ச பௌதிகமான சரீரத்தை அரணம் அன்று என்று, Aranam Andru Endru - ரக்ஷகமல்லவென்று கொண்டு உய்ய, Uyya - உஜ்ஜீவித்துப் போக கருதினால் ஏல், Karuthinaal Ael - நினைத்தாயாகில் சந்து சேர், Sandhu Seer - சந்தனமணிந்த மெல் முலை, Mel Mulai - மெல்லிய முலைகளையுடைய பொஷ் மலர் பாவையும் தாமும், Posh Malar Paavayum Thaamum - பெரிய பிராட்டியாரும் தாமுமாக நாளும், Naalum - எப்போதும் வந்து சேர, Vandhu Sera - கூடிவாழுமிடமான |