திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1816 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1816பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கேவல தர்க்கம் கொண்டு அர்த்த நிர்ணயம் பண்ணுகை அன்றிக்கே பிரமாணம் கொண்டு அர்த்த நிச்சயம் பண்ணுமவர்கள் தன்னை ஒழிய வேறு ஒன்றை போக்யமாக நினைத்து இருப்பார்க்கும் அத்தைக் கொடுக்கும் மகோதாரன் – இவ்வமிர்தம் எனக்கு வேண்டா என்னாமை கிடாய் வேண்டுவது) 9
வெள்ளியார் பிண்டியார் போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ள நூல் தன்னையும் கருமம் அன்று என்று உய்யக் கருதினாயேல் தெள்ளியார் கை தொழும் தேவனார் மா முநீரமுது தந்த வள்ளலார் வல்ல வாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே –9-7-9
பதவுரை Show / Hide
வெள்ளியார், Velliyar - பாசுபதர்களென்றும் (- (வல்லவாழ் *** மருவு))
பிண்டியார், Pindiyar - ஜைநர்களென்றும்
என்றிவர், Endru Ivar - சொல்லப்படுகிற புறமதத்தவர்கள்
ஒதுக்கின்ற, Othukkindra - சொல்லிக்கொண்டுதிரிகிர
கள்ளம் நூல் தன்னையும், Kallam Nool Thannaiyum - பொய்யான சாஸ்த்ரங்களையும்
கருமம் அன்று என்று, Karumam Andru Endru - ‘இவைநமக்கு உபாதேயமல்ல’ என்றுகொண்டு
உய்ய, Uyya - உஜ்ஜீவித்துப்போக
கருதினாய் ஏல், Karuthinai Ael - நினைத்தாயாகில்
தெள்ளியார், Thelliyar - தெளிவுபெற்றவர்கள்
கைதொழும், Kaithozhum - வணங்கப்பெற்ற
தேவனார், Devanar - ஸ்வாமியாயும்
மா முநீர், Maa Munir - பெரிய கடலில் நின்றும்
அமுது, Amuthu - அமுதத்தை
தந்த, Thanda - எடுத்துத் தந்தருளின
வள்ளலார், Vallalar - உதார்ராயுமிருக்கிற பெருமாளுடையதான