திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1817 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1817பெரிய திருமொழி || (9-7–தந்தை தாய்) (திரு வல்லவாழ்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத்தைக் கற்று வல்லார் –பூமிப் பரப்புக்கு அடைய தாங்களே நிர்வாஹகராய் தேஹ சமனந்தரம்-நித்ய விபூதியிலே புக்கு-ஏஷஹ்யேவா நந்தயாதி -என்கிறபடியே நிரதிசய ஆநந்த யுக்தராவார்) 10
மறைவலார் குறைவிலா ருறையுமூர் வல்ல வாழடிகள் தம்மை சிறைகுலா வண்டறை சோலை சூழ் கோல நீளாலி நாடன் கறையுலா வேல் வல்ல கலியன் வாயொலி யிவைகற்று வல்லார் இறைவராய் இருநிலம் காவல் பூண்டு இன்ப நன்கெய்துவாரே –9-7-10
பதவுரை Show / Hide
மறை வலார், Marai Valar - வேதமல்லவர்கள்
குறைவு இலார், Kuraivu Ilar - குறைவொன்றுமில்லாதவர்களாய்க் கொண்டு
உறையும் ஊர், Urayum Oor - நித்யவாஸம்பண்ணுமிட மான
வல்லவாழ், Vallavaazh - திருவல்லவாழில் எழுந்தருளியிருக்கிற
அடிகள் தம்மை, Adigal Thammai - ஸ்வாமிவிஷயமாக
சிறைகுலாவண்டு அறைசோலை சூழ், Sirai Kulavandu Araisolai Soozh - சிறகையும் கொண்டாட்டத்தையுமுடைய வண்டுகள் ரீங்காரஞ் செய்யப்பெற்ற சோலைகளால் சூழப்பட்ட
கோலம், Kolam - அழகிய
நீள், Neel - பெரிய
ஆலி நாடன், Aali Naadan - திருவாலிநாட்டுக்குத் தலைவரும்
கறை உலாம், Karai Ulaam - ரத்தக்களைகழுவாத
வேல் வல்ல, Vel Valla - வேற்படையை யுடையருமான
சலியன், Saliyan - திருமங்கையாழ்வார்
வாய் ஒலி, Vaai Oli - திருவாயமலர்ந்த
இவை, Ivai - இப்பத்துப் பாசுரங்களை
கற்று வல்லார், Kattru Vallar - ஓதியுணரவல்லவர்கள்
இறைவர் ஆய், Iraivar Aay - அரசர்களாயிருந்துகொண்டு
இரு நிலம், Iru Nilam - விசாலமான இந்நிலத்தை
காவல் பூண்டு, Kaval Poondhu - ஆண்டு கொண்டு
நன்கு இன்பம் எய்துவரார், Nangu Inbam Eydhuvarar - பரமாநந்தமடையப்பெறுவர்