திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1818 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1818பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பிராப்த விஷயத்தை வணங்கிலும் வணங்குகிறாய் தவிரிலும் தவிருகிராய் – இதர விஷயங்களை முந்துற முன்னம் விட்டுக் கொடு நிற்கப் பாராய் -என்கிறார்) 1
முந்துற வுரைக்கேன் விரைக் குழல் மடவார் கலவியை விடுதடுமாறல் அந்தரம் ஏழு மலை கடல் ஏழுமாய எம்மடிகள் தம் கோயில் சந்தொடு மணியும் அணி மயில் தழையும் தழுவி வந்தருவிகள் நிரந்து வந்திழி சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-1
பதவுரை Show / Hide
மடநெஞ்சே, Madanenchae - விதேயமானமனமே!, (- (அதைவிட்டுச் செய்யவேண்டுவது யாதெனில்))
முந்துற உரைக்கேன், Mundhura Uraikken - (உனக்கு) முக்கியமாகச் சொல்லுகிறேன், (கேள்)
விரை குழல் மடவார் கல்வி, Virai Kuzhal Madavaar Kalvi - பரிமளம்மிக்க கூந்தலை யுடையரான மாதர்களின் கல்வியாகிற
தடுமாறலை, Thadumaaralai - தடுமாற்றத்தை
விடு, Vidu - விட்டொழி,
அந்தரம் ஏழும், Andharam Ezhum - ஏழுதீவுகளும்
அலை கடல் ஏழும் ஆய, Alai Kadal Ezhum Aay - அலையெறிகின்ற ஸப்த ஸாகரங்களுமாய்ப் பரந்து நிற்கிற
எம் அடிகள் தம், Em Adigal Tham - நம் ஸ்வாமியினுடைய
கோயில், Koyil - இருப்பிடமாய்
அருவிகள், Aruvigal - அருவிகளானவை
சந்தொடு, Sandhodu - சந்தனமரங்களோடு
மணியும், Maniyum - ரத்னங்களையும்
அணி மயில் தழையும், Ani Mayil Thazhaim - அழகிய மயில் தோகைகளையும்
தழுவி வந்து, Thazhuvi Vandu - உருட்டிக்கொண்டுவந்த
நிரந்து, Nirandhu - நெருங்கி
வந்து இழி, Vandu Izhil - பிரவஹிக்கப்பெற்ற
சாரல், Saaral - பக்கங்களையுடைத்தான
மாலியருஞ்சோலை, Maaliyaruncholai - திருமாலிருஞ்சோலையை
வணங்குதும் வா, Vananguthum Vaa - வணங்குவோம் வா