திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1819 | பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நித்ய சூரிகளும் அண்டாந்தர வர்த்திகளானவர்களும் ஆஸ்ரயிக்க ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே பள்ளி கொண்டு ஆதி ராஜ்ய சூசகமான திரு அபிஷேகத்தை உடைய ப்ரதானர் வர்த்திக்கிற தேசம்) 2 | இண்டையும் புனலும் கொண்டிடையின்றி எழுமினோ தொழுதும் என்று இமையோர்
அண்டரும் பரவ வரவணைத் துயின்ற சுடர் முடிக் கடவுள் தம் கோயில்
விண்டலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-2 | பதவுரை Show / Hideஇண்டையும், Intaiyum - பூமாலையையும் (- (சாரல், மாலிருஞ்சோலை வணங்குதும்மடநெஞ்சே வா)) புனலும், Punalum - தீர்த்தத்தையும் கொண்டு, Kondru - ஏந்திக்கொண்டு இடைஇன்றி, Itaiyinri - நிரந்தரமாக தொழுதும், Thozhudum - ஸேவிப்போம் எழுமின் என்று, Elumin Enru - எழுந்திருங்கள் என்று சொல்லிக்கொண்டு இமையோர், Imaiyor - நித்யஸூரிகளும் அண்டரும், Antarum - தேவர்களும் பாவ, Pava - ஆச்ரயிக்க அரவு அணை துயின்ற, Aravu Anai Tuyinra - சேஷசயனத்தில் திருக்கண்வளர்ந்தருள் கின்றவனும் சுடர் முடி, Cutar Muti - சோதிமிக்க கிரீடத்தை யுடையவனுமான கடவுள் தம், Katavul Tam - எம்பெருமானுடைய கோயில், Koyil - இருப்பிடமாய் விண்டு அலர், Vindu Alar - விண்டுவிரியாநிற்பதாய் தூளி, Tuli - தூள்களையுடையதான வேய், Vey - மூக்கில் வளர், Valar - வளரப்பெற்ற புறவில், Puravil - சுற்றுப்பக்கங்களில் விரை, Virai - பரிமளம் மிக்க குறிஞ்சி மலரின், Kurinci Malarin - குறிஞ்சிப்பூவினுடைய நறு தேன், Naru Ten - செவ்வித்தேனிலே அமர், Amar - படிந்த வண்டு, Vandu - வண்டுகளையுடைய |