திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1820 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1820பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அழகு மிக்கு இருந்துள்ள ஸ்ரீ வாமன வேஷத்தை பரிஹரித்து அதி ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு பூமிப் பரப்பை அடைய அளந்து கொண்டு – அந்தச் செயலாலே என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமி யானவன் பிற்பட்டார்க்கு இழக்க வேண்டாத படி நிற்கிற தேசம்) 3
பிணி வளராக்கை நீங்க நின்று ஏத்தப் பெரு நிலம் அருளில் முன்னருளி அணி வளர் குறளாய் அகலிடம் முழுதும் அளந்த வெம்மடிகள் தம் கோயில் கணி வளர் வேங்கை நெடு நிலமதனில் குறவர் தம் கவணிடைத் துரந்த மணி வளர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-3
பதவுரை Show / Hide
பிணிவளர், Pinivalar - நோய்கள் வளரப்பெற்ற (- (மடநெஞ்சே!-))
ஆக்கை, Aakkai - சரீரம்
நீங்க, Neenga - நீங்குமாறு
நின்று ஏத்த, Ninru Aetha - நின்று துதிப்பதற்காக
பெரு நிலம், Peru Nilam - பரந்த பூமியை
அருளில், Arulil - க்ருபையினாலே
முன் அருளி, Mun Aruli - முன்னே தந்தருளினவனும்
அணி வளர் குறள் ஆய், Ani Valar Kural Aayi - அழகுமின்ன வாமநமூர்த்தியாய்
அகல் இடம் முழுதும், Akal Idam Muzhudhum - பூமிப்பரப்பையெல்லாம்
அளந்து, Alandhu - அளந்து கொண்டவனுமான
எம் அடிகள் தம் கோயில், Em Adigal Tham Koyil - எம்பெருமானுடைய இருப்பிடமாய்
கணி வளர் வேங்கை, Kani Valar Vengai - காலமுணர்த்தும் சோதிடன் போன்று வளர்கின்ற வேங்கைமரங்களையுடைய
நெடு நிலம் அதனில், Nedu Nilam Adhanil - விசாலமான பூமியிலே
குறவர், Kuravar - குறவர்கள்
தம், Tham - தங்களுடைய
கவண் இடை துரந்த, Kavan Idai Thurandha - கல்லெறியுங் கயிற்றில் வைத்து எறிந்த
மணி, Mani - மணிகளினொளி
வளர், Valar - மிகுதியாகக் காணப்பெற்ற
சாரல், Saaral - சுற்றுப்பக்கங்களையுடைய
மாலிருஞ்சோலை., Malirunjolai - வணங்குதும்வா