திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1821 | பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒரு ருஷி வாக்யத்தையே கொண்டு ஸ்திரீ வதம் என்று பிற்காலியாதே ரஷகரான நமக்கு ரஷ்ய வர்க்கத்தின் உடைய ரஷணத்துக்கு ஏகாந்தமானது செய்ய வேண்டாவோ -என்று அவள் முடியும்படி திரு உள்ளத்திலே கொண்டவன் – பின்னையும் பிற்பாடர் உடைய ரஷணத்துக்கு பாங்கான நிலம் என்று விரும்பி -வர்த்திக்கிற ஸ்ரீ கோயில்) 4 | சூர்மையிலாய பேய் முலை சுவைத்துச் சுடு சரமடு சிலைத் துரந்து
நீர்மையிலாத தாடகை மாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்
கார்மலி வேங்கை கொங்கலர் புறவில் கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்
வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-4 | பதவுரை Show / Hideசூர்மையில் ஆய், Soormail Aayi - கொடுமையாடு கூடின (- (தண் மாலிருஞ்சோலை, வணங்குதும், மடநெஞ்சே! வா-)) பேய், Pei - (பூதனையென்னும்) பேய்ச்சியினுடைய முலை, Mulai - (விஷந்தீற்றிய) முலையை சுவைத்து, Suvaithu - (அவளுயிர்மாளச்) சுவைத்துண்டவனாய் சுடு சரம், Sudu Saram - கொடிய அம்புகளை அடு சிலை துரந்து, Adu Silai Thurandhu - பகைவரை முடிக்கவல்ல வில்லிலே தொடுத்துவிட்டு நீர்மை இலாத தாடகை மாள நினைந்தவர், Neermai Iladha Thaadagai Maala Ninaindhavar - இரக்கமற்றவளான தாடகைமுடியும்படி ஸங்கல்பித்தவனான பெருமான் மனம் கொண்ட கோயில், Manam Konda Koyil - திருவுள்ளம்பற்றி வாழுமிடமாய் கால் மலி, Kaal Mali - மேகமண்டலம்வரை ஓங்கிவளர்ந்த வேங்கை, Vengai - வேங்கைமரங்களும் கோங்கு, Kongu - கோங்குமரங்களும் அலர், Alar - விகஸிக்கப்பெற்ற புறவில், Puravil - பொழில்களிலே கடி, Kadi - பரிமளம்மிக்க குறிஞ்சி மலரின், Kurinci Malarin - குறிஞ்சிப்பூவினுடைய நறு தேன், Naru Ten - செல்வித்தேனினுடைய வார் புனல், Vaar Punal - ப்ரவாஹம் சூழ், Sool - சூழப்பெற்றதான |