திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1823 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1823பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு வநந்த வாழ்வான் மேலே கண் வளர்ந்து அருளி – அங்கு நின்றும் போந்து அவதரித்து விளாம் பழத்துக்காக ஒரு சிறு கன்றை வீசி கையிலே குடங்களைக் கொண்டு கூத்தாடி -பெண்கள் உடைய குரவைக் கூத்திலே தன்னைக் கொடு வந்து கோத்து மநோ ஹாரியான சேஷ்டிதத்தை உடைய ஸ்ரீ சுவாமி வர்த்திக்கிற தேசம்) 6
விடங்கலந்தமர்ந்த வரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங்கன்று விசிறி குடங்கலந்தாடிக் குரவை முன் கோத்த கூத்த வெம்மடிகள் தம் கோயில் தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிறத் தடவரைக் களிறு என்று முனிந்து மடங்கல் நின்ற திரு மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-6
பதவுரை Show / Hide
விடம் கலந்து, Vidam Kalandhu - (பிரதிகூலர்மேல் உமிழ்வதற்காக) விஷத்தோடே கூடி (- (மடநெஞ்சே!-) (அதைவிட்டுத் திருவாய்ப்பாடியிலே வந்து பிறந்தருளி) (மேகங்களானவை) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா.))
அமர்ந்த, Amarntha - வாய்ப்பாக அமைந்த
அரவு அணை, Aravu Anai - திருவனந்தாழ்வானாகிற படுகையில்
துயின்று, Thuyinru - பள்ளிகொள்பவனாயிருந்து
முன், Mun - முன்பொருகால்
விளங்கனிக்கு, Vilanganikku - (அஸுராவேசங்கொண்ட) விளாம்பழத்தின்மீது
இன கன்று, Ina Kandu - (அப்படியெ அஸுரா வேசங் கொண்ட ஒரு கன்றுகுட்டியை
விசிறி, Visiri - வீசியெறிந்தவனாயும்
குடம் கலந்து ஆடி, Kudam Kalandhu Aadi - பலகுடங்களைச் சேர்த்தெடுத்தாடினவனாயும்
குரவை கோத்த, Kuravai Koththa - ராஸக்ரீடை நடத்தினவனாயும்
கூத்த, Kooththa - இப்படிப்பட்ட பலவகையான ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையனாயுமுள்ள
எம் அடிகள் தம், Em Adigal Tham - எம்பெருமானுடைய கோயில்
தட கடல், Thada Kadal - ஆழ்ந்தகடலிலே
முகந்து, Mugandhu - நீரைமொண்டுகொண்டு
விசும்பு இடை, Visumbu Idai - ஆகாசத்திலே (ஏறி)
பிளிற, Pilira - சுர்ஜிக்க, (அதைக்கேட்டு)
மடங்கல், Madangal - சிங்கமானது
தட வரை களிறு என்று முனிந்து, Thada Varai Kaliru Endru Munindhu - பெரிய மலையிலுள்ள யானை (கர்ஜிக்கிறது) என்றெண்ணிச் சீற்றங்கொண்டு
நின்று அதிரும், Ninru Adhirum - நிலைநின்று பிரதிகர்ஜிக்கப் பெற்ற