திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1824 | பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித விரோதிகளை போக்குகையில் உண்டான ப்ரீதியாலே உகந்து எறிந்த ஸ்ரமஹரமான வடிவை உடையவன் ஆஸ்ரித விரோதிகளைப் போக்குகைக்கு பாங்கான தேசம் என்று திரு உள்ளத்தாலே ஆதரித்து வர்த்திக்கிற ஸ்ரீ கோயில் – என்கிறார் ஏழாம் பாசுரத்தில்) 7 | தேனுகனாவி போயுக வங்கோர் செழும் திரள் பனம் கனி யுதிர
தானுகந்து எறிந்த தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்
வானகச் சோலை மரகதச் சாயல் மா மணிக்கல்லதர் நிறைந்து
மானுகர் சாரல் மாலிருஞ்சோலை வணங்குதும் வா மட நெஞ்சே –9-8-7 | பதவுரை Show / Hideதேனுகன், Thenukan - தேநுகாஸுரனுடைய (- (மடநெஞ்சே!-) (மாலிருஞ்சோலை, வணங்குதும் வா)) ஆவி, Aavi - பிராணன் போய் உக, Poi Uga - தொலைந்து போவதற்காக அங்கு, Angu - அவ்விடத்தில் ஓர் செழு திரள் பனங்களி உதிர, Oru Sezhu Thiral Panangal Uthira - அழகாக்த் திரண்டிருந்த பனம்பழங்கள் உதிரும்படியாக தான் எறிந்து உகந்த, Thaan Erinthu Ugandha - அக்கழுதையைப் பனங்கனிமேலெறிந்து திருவுள்ளமுவந்த தட கடல் வண்ணர், Thada Kadal Vannaar - கம்பீரமான கடல்போன்ற வடிவையுடையரான பெருமாள் முன், Mun - முன்பு எண்ணி, Enni - இதுவே பாங்கான இடமென்று திருவுள்ளம்பற்றி இடம் கொண்ட, Idam Konda - இருப்பிடமாக ஸ்வீகரித்த கோயில் மான், Maan - மான்களானவை, மரதகம் சாயல், Maradhagam Saayal - மரதகமணிபோன்ற ஒளியையுடையவையாய் வானகம், Vaanagam - ஆகாசத்தளவும் ஓங்கினவைகளான சோலை, Solai - சோலைகளிலிருக்கிற மா மணிக்கல் அதர், Maa Manikkal Adhar - நீலப்பாறை வழிகளில் (புகுந்து) நிறைந்து, Niraindhu - நிறைய இருந்து நுகர், Nugar - மேயப்பெற்ற சாரல், Saaral - பக்கங்களையுடைத்தான |