திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1827 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1827பெரிய திருமொழி || (9-8–முந்துற) (திரு மாலிருஞ்சோலை 1) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்வ ஹிருதயத்திலே அனுசந்தித்துக் கொண்டு பாடுகைக்கு ஈடான பாக்கியம் உடையவர்கள் இக்கடல் சூழ்ந்த பூமிக்கு நிர்வாஹகர் ஆகப் பெறுவார்) 10
வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை மா மணி வண்ணரை வணங்கும் தொண்டரைப் பரவும் சுடரொளி நெடு வேல் சூழ் வயலாலி நன்னாடன் கண்டல் நல வேலி மங்கையர் தலைவன் கலியன் வாயொலி செய்த பனுவல் கொண்டிவை பாடும் தவம் உடையார்கள் ஆழ்வார் இக்குரை கடலுலகே –9-8-10
பதவுரை Show / Hide
வண்டு அமர், Vandu Amar - வண்டுகள் படிந்த
சாரல், Saaral - பக்கங்களையுடைய
மாலிருஞ் சோலை, Maalirunj Cholai - திருமாலிருஞ்சோலையிலுள்ள
மா மணி வண்ணரை, Maa Mani Vannarai - நீலமணிவண்ணரான அழகரை
வணங்கும் தொண்டவர், Vanangum Thondavar - வணங்குகின்ற பாகவதர்களை
பரவும், Paravum - துதிப்பவரும்
சுடர் ஒளி நெடு வேல், Sudar Oli Nedu Vel - மிக்கவொளி பொருந்திய பெரிய வேற்படையை யுடையவரும்
சூழ் வயல் ஆலி நல் நாடன், Sool Vayal Aali Nal Naadan - பரந்த வயல்களை யுடைய நல்ல திருவாலி நாட்டுக்குத் தலைவரும்
கண்டல் நல் வேலி மங்கையர் தலைவன், Kandal Nal Veli Mangaiyar Thalaivan - தாழைகளை அழகிய வேலையாகக் கொண்ட மங்கைநாட்டிலுள்ளார்க்கு நிர்வாஹகருமான
கலியன், Kaliyan - ஆழ்வார்
வாய் ஒலி செய்த, Vaai Oli Seitha - திருவாய்மலர்ந்தருளிய
பனுவல இவை கொண்டு, Panuvai Ivai Kondu - இப்பாசுரங்களைக் கொண்டு
பாடும் தவம் உடையார்கள், Paadum Thavam Udaiyargal - பாடும்படியான பாக்கிய முடையவர்கள்
குரை கடல் இவ்வுலகு, Kurai Kadal Ivvalagu - ஒலிக்கின்ற கடலால் சூழப்பட்ட இவ்வுலகை
ஆள்வர், Aalvar - ஆளப்பெறுவர்.