திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1828 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1828பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ உபய விபூதி உக்தனாய் இருந்து வைத்து –ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து அவதரித்து – பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த கிலேசத்தைப் பரிஹரித்து – ஸ்ரீ கோவிந்தாபிஷேகம் பண்ணினவன் – பிற்பாடராய்-இடக்கை வலக்கையும் அறியாத சம்சாரிகளுக்கும் முகம் கொடுக்கைக்காக ஸ்ரீ திருமலையிலே வந்து சந்நிஹிதன் ஆனான் – அவனோடு அணைக்கைக்கு ஈடான அழகை உடையவள்அணைந்தே விட வல்லளோ) 1
மூவரில் முன் முதல்வன் முழங்கார் கடலுள் கிடந்து பூ வளருந்தி தன்னுள் புவனம் படைத்து உண்டு உமிழ்ந்த தேவர்கள் நாயகனைத் திரு மால் இருஞ்சோலை நின்ற கோவலர் கோவிந்தனைக் கொடியேரிடை கூடுங்கொலோ –9-9-1
பதவுரை Show / Hide
மூவரில், Moovarinil - த்ரிமூர்த்திகளுள்
முன் முதல்வன், Mun Muthalvan - முக்கியனும்
முழங்கு ஆர், Muzhangu Aar - (திரைக்கிளப்பத்தாலே கோஷித்தல் பொருந்திய
கடலுள், Kadalul - திருப்பாற்கடலிலே
கிடந்து, Kidandhu - திருக்கண்வளர்ந்தருளி
உந்தி, Undhi - திருநாபியில்
அலர், Alar - மலர்கின்ற
பூ தன்னுள், Poo Thannul - (தாமரைப்) பூவிலே
புவனம், Puvanam - உலகத்தை
படைத்து, Padaiththu - ஸ்ருஷ்டித்து
உண்டு, Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றில்வைத்து நோக்கி
உமிழ்ந்த, Umizhndha - பிறகு வெளிப்படுத்திவனும்
தேவர்கள் நாயகனை, Thevargal Nayakanai - நித்யஸூரிகளுக்கு நாதனும்
திருமாலிருஞ் சோலை நின்ற, Thirumaliruncholai Nindra - திருமாலிருஞ்சோலை மலையில் நிற்பவனுமான
கோவலர் கோவிந்தனை, Kovalaar Govindhanai - கோபாலக்ருஷ்ணனான எம்பெருமானை
கொடி எர் இடை, Kodi Er Idai - கொடிபோன்ற இடையை யுடையளான என் மகள்
கூடும் கொலோ, Koodum Kolon - அணையப்டபெறுவளோ?