திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1829 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மூ வுலகும் படைத்த பிரதான மூர்த்தி தன்னை –ரஷணத்துக்கு இட்ட வீரக் கழல் த்வனியா நின்றுள்ள திருவடிகளை –அவற்றைக் காண்கைக்கு கண் படைத்த இவள் கண்டே விட வல்லளேயோ) 2 | புனை வளர் பூம் பொழிலார் பொன்னி சூழ் அரங்க நகருள்
முனைவனை மூவுலகும் படைத்த முதல் மூர்த்தி தன்னைச்
சினை வளர் பூம் பொழில் சூழ் திருமால் இருஞ்சோலை நின்றான்
கனை கழல் காணும் கொலோ கயற்கண்ணி எம் காரிகையே –9-9-2 | பதவுரை Show / Hideபுனை வளர், Punai Valar - புன்னைமரங்கள் வளரப்பெற்ற (- (திருக்கண்வளர்ந்தருளுகிற)) பூ பொழில் ஆர், Poo Pozhil Aar - பூஞ்சோலைகளை யுடையதும் பொன்னி சூழ், Ponni Soozh - திருக்காவேரியாலே சூழப்பட்டதுமான அரங்கம் நகருள், Arangam Nagarul - திருவரங்கம் பெரியகோயிலில் முனைவனை, Munaivanai - பிரதாநனும் மூ உலகும் படைத்த, Moo Ulakum Padaiththa - மூன்று லோகங்களையும் ஸ்ருஷ்டித்த முதல் மூர்த்தி தன்னை, Muthal Moorhthi Thannai - முக்கிய மூர்த்தியானவனும் சினை வளர் பூ பொழில் சூழ், Sinai Valar Poo Pozhil Soozh - பணைகள்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலை நின்றான், Thirumaliruncholai Nindraan - திருமாலிருஞ்சோலையில் நிற்பவனுமான எம்பெருமானுடைய கனை கழல், Kanai Kazhal - (வீரக்கழலின்) ஒலியை யுடைத்தான திருவடிகளை கயல் கண்ணி, Kayal Kanni - கயல்போன்ற கண்களை யுடையளான எம் காரிகை, Em Kaarikai - எமது அழகியமகள் காணும் கொலோ, Kaanum Koloo - ஸேவிக்கப்பெறுவளோ? |