திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1830 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1830பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திரு மலையிலே நின்று அருளின –அண்டாந்தர வர்த்திகளுக்கு நிர்வாஹகன் ஆனவனை – அவனுக்கு ஈடாக ஒப்பித்து இருக்கிற இவள்அவ் ஒப்பனையோடு சென்று அணுக வல்லளேயோ) 3
உண்டு உலகு ஏழினையும் ஒரு பாலகனாய் ஆலிலை மேல் கண் துயில் கொண்டுகந்த கரு மாணிக்க மா மலையை திண்டிறல் மா கரி சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற அண்டர் தங்கோவினை இன்று அணுகும் கொலோ என்னாயிழையே –9-9-3
பதவுரை Show / Hide
உலகு எழினையும், Ulaku Ezhinaiyum - ஸப்தலோகங்களையும்
உண்டு, Undu - (பிரளயகாலத்தில்) திருவயிற்றினுள் அடக்கி
ஒரு பாலகன், Oru Palagan - ஒரு சிறுகுழவியாய்
ஆல் இலை மேல், Aal Ilai Mael - ஓராலிலையின்மீது
கண் துயில் கொண்டு, Kan Thuyil Kondu - திருக்கண்வளர்ந்தருளி
உகந்த, Ugantha - திருவுள்ள முவந்த
கரு மாணிக்கம், Karum Manikkam - பெரிய கருமாணிக்கமலை போன்ற வடிவையுடைய
திண் திறல் மா கரி சேர், Thin Thiral Maa Kari Seer - மிக்க வலிமை வாய்ந்த மதயானைகள் சேரப்பெற்ற
திருமாலிருஞ்சோலை, Thirumaliruncholai - திருமாலிருஞ்சோலை மலையில்
நின்ற, Nindra - நிற்பவனுமான
அண்டர் தம் கோவினை, Andar Tham Kovinaik - தேவாதிதேவனை
என் ஆய் இழை, En Aay Izhai - சுத்தமான ஆபரணங்களை யணிந்துள்ள என்மகள்
இன்று, Indru - இப்போது
அணுகும் கொல், Anugum Kol - கிட்டப்பெறுவளோ?