திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1831 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1831பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சந்திர பதத் தளவும் ஓங்கின சிகரத்தை உடைத்தான ஸ்ரீ திரு மலையிலே வந்து சந்நிஹிதனாய் – நமக்கு எளியவன் ஆனவனை –அவ் வெளிமைக்கு தோற்று இருக்கிற இவள் கிட்ட வல்லளேயோ) 4
சிங்கமதாய் அவுணன் திறலாகம் முன் கீண்டுகந்த பங்கய மா மலர்க்கண் பரனை யெம் பரஞ்சுடரை திங்கள் நன் மா முகில் சேர் திரு மாலிருஞ்சோலை நின்ற நங்கள் பிரானை யின்று நணுகும் கொலோ என் நன்னுதலே –9-9-4
பதவுரை Show / Hide
முன், Mun - முன்பொருகாலத்தில் (- (திருமாலிருஞ்சோலையில்))
சிங்கம் அது ஆய், Singam Adhu Aay - நாஸிம்ஹ மூர்த்தியாகி
அவுணன், Avaunan - (இரணியனென்னும்) அசுரனுடைய
திறல் ஆகம், Thiral Aagam - வலிமையுள்ள மார்பை
கீண்டு, Keendu - எளிதாகக்கிழித்து
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்தவனும்
மா, Maa - பெரிய
பங்கயம் மலர், Pangayam Malar - தாமரைப்பூப்போன்ற
கண், Kan - திருக்கண்களை யுடையவனும்
பரனை, Paranai - எல்லாரினும் மேம்பட்டவனும்
எம், Em - எமக்கு நாதனும்
பரம் சுடரை, Param Sudarai - பரஞ்சோதியென்று ஓதப்பட்டவனும்,
திங்கள், Thingal - சந்திரமண்டலத்தோடும்
மா முகில், Maa Mukil - மேகமண்டலத்தோடும்
சேர், Ser - படிந்த (சிகரத்தையுடைத்தான)
நல், Nal - விலக்ஷணமான
நின்ற, Nindra - நிற்பவனுமான
நங்கள் பிரானை, Nangal Piranai - எம்பெருமானை
என் நல் நுதல், En Nal Nuthal - அழகிய நெற்றியை  யுடையளான என் மகள்
இன்று, Indru - இப்போது
நணுகும் கொல், Nanugum Kol - சென்று சேர்ந்திடுவனோ?