திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1832 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வாமன வேஷத்தைக் கொண்டு போய்ப் புக்கு வளர்ந்து –பூமியாந்தரிஷ்யாதிகள் மூன்றடியிலே அடங்கும்படி அளந்தவன் – ஸ்ரீ திருமலையிலே வந்து நின்ற –அயர்வறும் அமரர்கள் அதிபதியை அவர்களோடு ஒத்த ருசியை உடைய இவள் வணங்கித் தொழ வல்லள் கொலோ) 5 | தானவன் வேள்வி தன்னில் தனியே குறளாய் நிமிர்ந்து
வானகமும் மண்ணகமும் அளந்த திரி விக்கிரமன்
தேனமர் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற
வானவர் கோனை யின்று வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-5 | பதவுரை Show / Hideதானவன், Thaanavan - (மஹாபலியென்னும்) அசுரனுடைய (- (திருமாலிருஞ்சோலையில்) (என்பெண்மகள்)) வேள்வி தன்னில், Velvi Thannil - யாகத்திலே தனியே, Thaniye - அத்விதீயனான குறள் ஆய், Kural Aayi - வாமநமூர்த்தியாய் (எழுந்தருளி) நிமிர்ந்து, Nimirndhu - (உதகதானம் பெற்றவாறே) ஓங்கிவளர்ந்து வானமும், Vaanamum - மேலுலகங்களையும் மண் அகமும், Man Akamum - கீழுலகங்களையும் திரி விக்கிரமன், Thiri Vikkiraman - த்ஜீவிக்ரம மூர்த்தியானவனும் தேன் அமர் பூ பொழில் சூழ், Then Amar Poo Pozhil Soozh - தேன்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட நின்ற, Nindra - நிற்பவனுமான வானவர் கோனை, Vaanavar Konai - தேவாதிதேவனை இன்று, Indru - இப்போது வணங்கி தொழவல்லள், Vanangi Thozhavallal - ஸேவிக்கப்பெறுவளோ? |