திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1833 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பர பக்திக்கும் அத்வேஷத்துக்கும் வாசி வையாதே தன்னைக் கொடுப்பான் ஒருவன் -என்கை – பர பக்தியையும் அத்வேஷத்தையும் பிறப்பிக்கைக்காக-வந்து அவதரித்தவன் – அந்த அவதார பலம் இருக்கிறபடி –பிரசஸ்த கேசனாய் இருக்கிறவனை – அக் குழலுக்கு தகுதியான அவயவ சோபையை உடையவள் கிட்ட வல்லளேயோ) 6 | நேசமிலாதவர்க்கும் நினையாதவர்க்கும் அரியான்
வாச மலர்ப் பொழில் சூழ் வட மா மதுரைப் பிறந்தான்
தேசமெல்லாம் வணங்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
கேசவ நம்பி தன்னைக் கெண்டை யொண் கண்ணி காணும் கொலோ –9-9-6 | பதவுரை Show / Hideநேசம் இல்லாதவர்க்கும், Nesam Illaadavarkkum - பரபக்தியில்லாதவர்களுக்கும் (- (திருமாலிருஞ்சோலையில்)) நினையாதவர்க்கும், Ninaiyaadavarkkum - (‘ஈச்வரனில்லை’ என்று நாஸ்திகவாதம் பண்ணுவதற்காகிலும் அவனை) நெஞ்சால் எண்ணாதவர்கட்கும் அரியான், Ariyaan - கிட்டக்கூடாதவனும், வாசம் மலர் பொழில் சூழ், Vaasam Malar Pozhil Soozh - மணம்மிக்கமலர்களையுடைய சோலைகளால் சூழப்பட்ட வட மா மதுரை, Vada Maa Madurai - திருவடமதுரையில் தேசம் எல்லாம் வணங்கும், Desam Ellam Vanangum - எல்லாத தேசத்தவர்களாலும் வந்து வணங்கப்படும் தான் நின்ற, Nindra - நிற்பவனும் கேசவன் நம்பி தன்னை, Keesavan Nambi Thannai - சிறந்த குழல்கற்றையை யுடையனுமான பெருமானை கெண்டை ஒண் கண்ணி, Kendai On Kanni - கெண்டைமீன் போன்ற கண்ணழகுடையளான என்மகள் காணும் கொலோ, Kaanum Koloo - காணப்பெறுவளோ? |