திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1834 | பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (விரோதி நிரசனத்தால் வந்த ஸ்ரமம் அடைய ஆற்றலாம் படியான தேசம் ஆயிற்று – தெளிந்த அருவிகள் ஆனவை கொழித்து எறடா நின்றுள்ள ஸ்ரீ திருமலையிலே – தன்னை சர்வ ஸ்வதானம் பண்ணி கொடு நிற்கிறவனை – அந்த ஔதார்யத்துக்கு நாம் இலக்காக வேணும் என்று இருக்கிற இவளுடைய மநோ ரதம் ஒரு படித் தலைக்கட்ட வற்றேயோ) 7 | புள்ளினை வாய் பிளந்து பொரு மா கரி கொம்பொசித்து
கள்ளச் சகடுதைத்த கரு மாணிக்க மா மலையை
தெள்ளருவி கொழிக்கும் திரு மாலிருஞ்சோலை நின்ற
வள்ளலை வாணுதலாள் வணங்கித் தொழ வல்லள் கொலோ –9-9-7 | பதவுரை Show / Hideபுள்ளினை வாய் பிளந்து, Pullinai Vaai Pilandhu - பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனும் (- (திருமாலிருஞ்சோலையில்)) பொரு மா கரி கொம்பு ஒசித்து, Poru Maa Kari Kombu Osiththu - போர்செய்ய முயன்றி (குவலயாபீடமென்னும்) மதகரியின் கொம்பை முறித்தவனும் கள்ளம் சகடு உதைத்த, Kallam Sakadu Uthaiththa - திருட்டெண்ணங்கொண்ட சகடாஸுரனை (த் திருவடிகளால்) உழைத்தொழித்தவனும் கரு மாணிக்கம் மா மலையை, Karum Manikkam Maa Malaiyai - பெரியகரிய மாணிக்கமலை போன்ற வடிவையுடையவனும் தெள் அருளி கொழிக்கும், Thal Aruli Kozhikkum - தெளிந்த அருவிகள் பிரவஹிக்கப்பெற்ற நின்ற, Nindra - நிற்பவனும் வள்ளலை, Vallalai - உதாரனுமான பெருமானை வாள் நுதலாள், Vaal Nuthalaal - ஒளிபொருந்திய நெற்றியை யுடையளான என்மகள் வணங்கி தொழ வல்லள் கொலோ, Vanangi Thozha Vallal Koloo - ஸேவிக்கப்பெறுவளோ? |