திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1835 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1835பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ நித்ய சூரிகள் அனுபவித்த வடிவு அழகை இங்கு உள்ளார் இழவாத படி தனக்கு வாசஸ் ஸ்தானமாகப் போரும்படி தர்ச நீயமான பொழி லாலே சூழப் பட்ட ஸ்ரீ திருமலையிலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை – தன் மயிர் முடியாலே இவனைத் துவக்க வல்ல இவள் அவனைத் தொழுதாளாய்த் தலைக் கட்ட வல்லளேயோ) 8
பார்த்தனுக்கு அன்று அருளிப் பாரதத்தொரு தேர் முன்னின்று காத்தவன் தன்னை விண்ணோர் கரு மாணிக்க மா மலையை தீர்த்தனைப் பூம் பொழில் சூழ் திரு மாலிருஞ்சோலை நின்ற மூர்த்தியைக் கை தொழவும் முடியும் கொலோ என் மொய் குழற்கே –9-9-8
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில்
பார்த்தனுக்கு, Paarththanu Kku - அர்ஜுநன்பக்கலிலே
அருளி, Aruli - அருள்கூர்ந்து
பாரத்தது, Paaraththathu - பாரதயுத்தத்திலே
ஒரு தேர் முன் நின்று, Oru Ther Mun Nindru - ஸாரதியாயிருந்து
காத்தவன் தன்னை, Kaaththavan Thannai - ரக்ஷித்தருளினவனும்,
விண்ணோர், Vinnor - நித்யஸூரிகள் அநுபவிக்கவுரிய
கரு மாணிக்கம் மா மலையை, Karum Manikkam Maa Malaiyai - கரிய பெரிய மாணிக்கமலை போன்றவடிவு படைத்தவனும்
தீர்த்தனை, Theerththanai - பரமபவித்திரனும்
பூம்பொழில் சூழ், Poombozhil Soozh - திருமாலிருஞ்சோலையில்
நின்ற, Nindra - நிற்பவனுமான
மூர்த்தியை, Moorththiyai - ஸ்வாமியை
கை தொழவும் என் மொய் குழற்கு முடியும் சொல், Kai Thozhavu En Moy Kuzharkku Mudiyum Sol - ஸேவிப்பதற்கு அடர்ந்தகூந்தலை யுடையளான் என் மக்களுக்கு வாய்க்குமோ?