திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1836 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1836பெரிய திருமொழி || (9-9–மூவரில்) (திரு மாலிருஞ்சோலை 2) - (பிரிவு ஆற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கி கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷிக்கைக்கு பாங்காக ரஷ்ய வர்க்கம் உள்ள இடம் தேடி வேதைக சமதிகம்யனாய் வைத்து கண்ணுக்கு இலக்காகும் படி ஸ்ரீ திரு மலையிலே நின்றவனை – அது தன்னை பரதத்வோடு ஒக்கச் சொல்லலாம் படி எத்தனையேனும் சாலத் தண்ணியர்க்கும் முகம் கொடுத்துக் கொடு நிற்கிற இடம் இறே இவ்விடம் –-ஸ்வர்க்கத்தில் அப்சரஸ்கள் வந்து ஆஸ்ரயிக்க அவர்கள் உடைய சிலம்பின் உடைய ஸ்வபாவத்தை உடைத்தான ஆற்றை உடைய ஸ்ரீ திருமலையிலே வந்து நிற்கிற கல்யாண குணங்களாலும் உஜ்ஜ்வலிதனாகா நின்றுள்ள சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரனை கிட்டுக்கைக்கு யோக்யமான அழகை உடைய இவள் அவனைக் கிட்டிவிட வல்லளேயோ) 9
வலம்புரி யாழியானை வரையார் திரடோளன் தன்னைப் புலம் புரி நூலவனைப் பொழில் வேங்கட வேதியனைச் சிலம்பிய லாறுடைய திரு மாலிருஞ்சோலை நின்ற நலந்திகழ் நாரணனை நணுகும் கொல் என் நன்னுதலே –9-9-9
பதவுரை Show / Hide
வலம்புரி ஆழியனை, Valampuri Aazhiyanai - சங்கும் சக்கரமுமுடையனும் (- (திருமாலிருஞ்சோலையில்))
வரை ஆர் திரள் தோளன் தன்னை, Varai Aar Thiral Tholan Thannai - மலைபோன்று திரண்ட திருத்தோழ்களை யுடையவனும்
புலம்பரி நூலவனை, Pulambari Noolavananai - மநோஹரமான யஜ்ஞோபவீதத்தையுடையவனும்
பொழில் வேங்கடம், Pozhil Vengadham - சோலைசூழ்ந்த திருவேங்கட மலையிலுள்ளவனும்
வேதியனை, Vedhiyai - வேதப்ராதிபாத்யனும்
சிலம்பு இயல் ஆறு உடைய, Silambu Iyala Aaru Udaiya - ‘சிலம்பு’ என்று சொல்லப்படுகிற நூபுரகங்கையை யுடைத்தான்
நின்ற, Nindra - நிற்பவனும்
நலம் திகழ் நாரணனை, Nalam Thigazh Narananai - திருக்கல்யாணகுணங்கள் விளங்கப் பெற்றவனுமான ஸ்ரீமந்நாராயணனை
என் நல் நுதல், En Nal Nuthal - அழகிய நெற்றியையுடையளான என் மகள்
நுணகும் சகால், Nunakum Sakal - கிட்டப்பெறுவளோ?